கும்பகோணம், நவ. 23- கும்ப கோணம் மேலக்காவேரி பகுதியில் வசித்து வரும் சக்கரபாணி, கடந்த 5 ஆண்டுகளாக இந்து முன்னணி அமைப்பில் கும்பகோணம் மாநகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தன் வீட்டின் மீது பெட் ரோல் குண்டு வீசப்பட் டதாக காவல்துறையில் புகார் செய்தார்.
ஆனால், பொது அமைதியை சீர்குலைத்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், விளம்பர நோக்கத்தோடும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சக்கரபாணி தன் வீட்டில் தானே பெட் ரோல்குண்டு வீசியுள் ளார் என்பது காவல் துறையினரின் விசார ணையில் தெரிய வந்து உள்ளது. சொந்த வீட்டில் தமக்கு தாமே பெட்ரோல் குண்டு வீசிய கும்பகோ ணம் இந்து முன்னணி மாநகர செயலாளர் சக் கரபாணியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ரவளி பிரியா மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல்துறையி னர் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment