டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம் குறித்த ஒன்றிய அரசின் தேர்வுகள் கவலை அளிக்கிறது, உச்சநீதி மன்றம் கருத்து.
தி இந்து:
* மோடி அரசு ஒரு செயல்படாத அரசு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கண்டனம்.
* இந்தியாவில் மத சுதந்திரம், தொடர்புடைய மனித உரிமைகள் அச்சுறுத்தலில் உள்ளது என அமெரிக்கா விமர்சனம்.
தி டெலிகிராப்:
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 500 ஆசிரியர்கள் தேவை. ஆனால் அதை நிரப்பாமல், , இந்துத்துவம் பெறு கிறது இந்துத்துவாவை ஊக்குவிப்பதில் ஒன்றிய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. காசி-தமிழ் சங்கமம், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) இடையேயான வரலாற்று உறவுகளைக் கொண்டாடும் ஒரு மாத நிகழ்வு நவம்பர் 17 அன்று BHU இல் தொடங்கியது. இப்போது நடப்பது இந்துத்துவாவை ஊக்குவிப்பதற்காக காசியைக் காட்டுவது தான். அரசியல் ஆதாயம் பெறவே இது செய்யப்படுகிறது” என்று அங்கு பணியாற்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.
உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கான இடஒதுக்கீடு களை அனுமதிப்பது, ஜாதி அடிப்படையிலான இட ஒதுக் கீட்டை சுற்றியுள்ள களங்கத்திற்கு சட்டபூர்வமான அங்கீ காரம் அளிப்பது போலாகும். நமது சமூக அடையாளங்கள் அனைத்தையும் பணமாக சுருக்கி, சமூக ரீதியாக ஒதுக்கப் பட்டவர்களைத் தொடர்ந்து மிதிக்க அனுமதிப்பதற்கான முதல் படி இதுவாகும் என இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கருத்து.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment