ஈரோடு, நவ. 23- ஈரோடு மாவட் டம் பெ.மேட்டுப்பாளையம் பொன்முகிலன் - செல்வி மகன் கவுதம் பிரபாகரன்- அண்ணமார் பாளையம் கிருட்டிணமூர்த்தி--பூங்கொடி மகள் தமிழரசி ஆகி யோரின் வாழ்க்கைத் துணை நல இணையேற்பு வரவேற்பு விழா 19.11.2022 சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்திப் பேசினார். அவரது வாழ்த்துரை யில் "மணமக்கள் சிக்கனமாகவும், சிறப்பாகவும் வாழ்ந்து எடுத்துக் காட்டான வாழ்க்கை வாழ வேண்டும். தந்தை பெரியார் வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ வேண்டும்" என்றார். விழாவிற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், கோபி மாவட்ட காப்பாளர் சீனிவாசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் அ.பாட் டுச்சாமி மல்லிகா வரவேற்புரை யாற்றினார். பேரா.ப.காளிமுத்து, மண்டல தலைவர் இரா.நற் குணன், மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம், செயலாளர் வழக் குரைஞர் மு.சென்னியப்பன், ஈரோடு மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், இளங்கோவன், தே.காமராஜ், ப.சத்தியமூர்த்தி, ஜெபராஜ், பிரகாசன், கோபி. தமிழ்ச்செல்வி, சேலம் மாவட்ட அமைப்பாளர் பூபதி ரா.பாட் டுச்சாமி, தேன்மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியாக கோபி மாவட்ட ப.க.செயலாளர் அ.பொன்முகி லன் நன்றி கூற விழா சிறப்புடன் நிறைவடைந்தது.
No comments:
Post a Comment