அபுதாபியில் பன்னாட்டு பெட்ரோலிய கண்காட்சி இந்திய அரங்கம் திறப்பு - இந்திய பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இடமில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

அபுதாபியில் பன்னாட்டு பெட்ரோலிய கண்காட்சி இந்திய அரங்கம் திறப்பு - இந்திய பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இடமில்லை

அபுதாபி, நவ. 1- அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், சார் பில் பன்னாட்டு பெட் ரோலிய கண்காட்சி மற் றும் மாநாடு  ஆண்டு தோறும் நடந்துவருகிறது. இந்த ஆண்டுக்கான கண் காட்சி திறக்கப்பட்டது. 

கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள முக்கிய பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனங் களுக்கு அங்கு பெயரள விற்கு கூட இடம் வழங்க வில்லை. 

அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறு வனம், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சார்பில் பன்னாட்டு பெட்ரோ லிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங் குகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் பன்னாட்டு எரிசக்தி நிறு வனங்களின் தலைவர்கள், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறு வனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகி யோர் கலந்து கொள்கின் றனர். 

இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவுக்கு, அய்க்கிய அரபு அமீரக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப் புத்துறை அமைச்சர் சுஹைல் முகமது ஃபராஜ் அல் மஸ்ரூயி விடுத்த அழைப்பை ஏற்று இந் தியா சார்பில் ஒன்றிய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச் சர் ஹர்தீப் சிங் புரி இன்று அய்க்கிய அரபு அமீரக நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். தமது பயணத்தின் போது அபு தாபி பன்னாட்டு பெட் ரோலிய கண்காட்சியில் ​​இந்திய பெட்ரோலியம் தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து அமைத்துள்ள அரங்கை யும் அவர் திறந்து வைக் கிறார். 

மேலும் இந்த கண் காட்சியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரி சக்தித்துறை அமைச்சர்கள், எரிசக்தி நிறுவனங்களின் தலைவர் களையும் அவர் சந்திப் பார். மேலும் அய்க்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையேயான எரிசக்தித் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர்களுடன் ஒன்றிய அமைச்சர் புரி விரிவான ஆலோசனை நடத்துவார் என்று ஒன் றிய பெட்ரோலியம் மற் றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டிலி ருந்து இந்த கண்காட்சிக்கு இந்திய பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனங் களான பாரத் பெட் ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனு மதி இல்லாமல் போனது. 

இது குறித்து கடந்த ஆண்டு விளக்கம் கொடுக் கப்பட்டபோது இந்தி யாவின் பெட்ரோலியம் தொடர்பான தனியார் நிறுவனக்கூட்டமைக்கு ஏற்பாடு செய்துள்ளது, தனியார் விவகாரத்தில் அவர்கள் யாருக்கு இடம் தரவேண்டும் என்ற விவ காரத்தில் அரசு தலையிட முடியாது என்று விளக்க அறிக்கை விட்டார். 

இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இடம் கொடுக்காத இந் திய தனியார் நிறுவனங்க ளுக்கு அரசு செலவில் வெளிநாடுகளில கண் காட்சி நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய அபுதாபி தூதரகம் ஏன் செய்து கொடுத்தது என்ற கேள்வியை யார் முன் வைப்பார்கள்?

No comments:

Post a Comment