தமிழ்நாட்டில் குறைந்தது கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

தமிழ்நாட்டில் குறைந்தது கரோனா தொற்று

சென்னை,நவ.23- தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

தமிழ்நாட்டில் நேற்று (22.11.2022) புதிதாக 15 ஆண்கள், 24 பெண்கள் உள்பட மொத்தம் 39 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு 5-க்கு கீழ் குறைந்துள்ளது. தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மருத்துவமனையில் 173 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கரோனா பாதிப்புக் குள்ளாகி 419 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


No comments:

Post a Comment