9.10.2022, ஞாயிறு மாலை 5 மணிக்கு, கல்பாக்கம் நகரியம் பல்நோக்கு சமு தாய கூடத்தில் நினைவில் வாழும் படா ளம் -தேவகி மகன் தோழர் ப.அஜித் குமார் மற்றும் பன்னீர்செல்வம் -அர்ச் சனா மகள் ப. சிந்து ஆகியோரின் மண விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செங்கல்பட்டு சுந்தரம் தலைமையேற்று ஒருங்கிணைத்தார். நகர தலைவர்
மா. விஜயகுமார் அனைவரையும் வர வேற்றார் பொதுக்குழு உறுப்பினர் சிறீ. பக்தவச்சலம், மாவட்டத் துணைத் தலைவர் நெல்லை சாலமன், இலத்தூர் ஒன்றிய தலைவர் பெரியார் வாசன், கலைமணி, நா.நீலமேகன், கோவிந்த சாமி, து.பேரானந்தம், ஆ.குமரவேல் ஆகியோர் முன்னிலையில் விசிக ஒன்றிய அமைப்பாளர் கே. விடுதலை வேந்தன், திமுக ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் வி.என்.மதன், புரட்சி பாரதம் துரை. மனோகரன், டிஏஇஎஸ்சி எஸ்டி சங்கம், டி.வி.சதீஷ் குமார் செயலாளர், செ.சகாதேவன் தலைவர், செங்கை தெற்கு மாவட்ட புரட்சி பாரத தலைவர் டாக்டர் சங்கர், செய்யூர் வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு ஆகியோர் வாழ்த்து ரைக்கு பின் திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்கு ரைஞர் பா. மணியம்மை சுயமரியாதை மணம் ஏன் தேவை? என விளக்கி பேசி வாழ்த்துரை வழங்கினார்.
திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் சுயமரி யாதை மண வரலாற்றையும் அதன் சிறப்பினையும் விளக்கி சிறப்புரை யாற்றி பின் மணமக்களுக்கு வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழியினை கூறி வாழ்விணை ஏற்பு விழா வினை நடத்தி வைத்தார்.
தந்தை பெரியார் வாழ்க, அண்ணல் அம்பேத்கர் வாழ்க, அன்னை மணி யம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க - என தோழர்கள் முழக்கமிட் டனர்.
இந்நிகழ்வில் நகரச் செயலாளர் சாமு நன்றி கூறினார். மேலும் திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைத்து கட்சித் தோழர்கள் மண மக்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment