ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தரும் மாணவர் இயக்கங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தரும் மாணவர் இயக்கங்கள்

பல்கலைக்கழகங்களில் பிற்போக்கு ஜாதியவாத கருத்தை பரப்ப முயற்சிக்கும்  பல்கலைக்கழக மானியக் குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையோடு நவம்பர் 25ஆம் தேதி திராவிட மாணவர் கழகம் நடத்தும் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. 

இந்திய அரசமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் "மன்னராட்சியின் மகிமை, ஜாதி பஞ்சாயத் துக்களும் அவற்றின் ஜனநாயக மரபுகளும், அர்த்த சாஸ் திரம், மனுஸ்மிருதி'' போன்ற தலைப்பில் உரை நிகழ்த்து மாறு மாநில ஆளுநர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு  தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது அரசமைப்புச் சட்டத்துக்கும், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கும் எதிரானதாகும். ஜாதி பஞ்சாயத்துகளும், ஜாதிய ரீதியான குழுக்களும் ஆணவப் படு கொலைகள், கும்பல் படுகொலைகள், மனிதத் தன்மையற்ற தீண்டாமை கொடுமைகள், பெண்களுக்கு எதிரான ஆணா திக்க பார்வை, சக மனிதர்களை இழிவாக நடத்தும் போக் கையே கொண்டுள்ளது. 2012 ஆண்டு உச்சநீதி மன்றத்தின் ஆணைக்கிணங்க ஒன்றிய அரசு ஜாதிய கட்ட பஞ்சாயத்து களை, வடமாநிலங்களில் உள்ள காப் பஞ்சாயத்துகளை சட்ட விரோதமானது என அறிவித்துள்ளது. 

அதேபோல மன்னராட்சி காலமென்பது ஜனநாயகம் முழுவதும் மறுக்கப்பட்ட முடியாட்சி காலமாகும், நிலப் பரப்புதுவமும் அதன் ஒடுக்குமுறை வடிவமும் நவீன காலத்திலும் நீடித்து வருகிறது.  மேலும் இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் அதன் நோக்கத்திற்கும் எதிரான தாகும். ஆனால் ஜெகதீஸ் குமார் உச்ச நீதிமன்ற ஆணை, அரசியல்‌அமைப்பு சட்டம் என எவற்றையும் மதிக்காமல் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

எனவே கல்வி நிலையங்களில் மாணவர்கள் மத்தியில் ஜாதிய பாகுபாட்டை உருவாக்கி சமத்துவத்தை சீர் குலைப்பது,  பிற்போக்கு பயங்கரவாத கருத்தை பரப்ப முயற்சிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள (யுஜிசி) பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது.

திராவிட மாணவர் கழகமும் இத்தகைய மாணவர் விரோத கருத்தை கண்டித்து தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்கள் உள்ள மாவட்டங்களில் போராட்டம் நடத்த உள்ள நிலையில் இந்திய மாணவர் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் சங்கத்தின் மாநில தலைவர், செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இப் போராட்டத்தில் பங்கேற்று கண்டனத்தை பதிவு செய்வ தோடு, ஒன்றிய அர சின் மாணவர் விரோத நடவடிக்கைக்கு எதிராக அனைத்து மாணவர் அமைப்புகளும் தோழர் களும் நண்பர்களும் திரளாக பங்கெடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறது.

- கோ.அரவிந்தசாமி, மாநிலத் தலைவர்

க.நிருபன்சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர்.

சமூகநீதி மாணவர் இயக்கம் 

திராவிட மாணவர் கழகம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு  மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான சமூக நீதி மாணவர் இயக்கம் (ஷிவிமி) முழு ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடைபெறும் இடங்களில் இயக்கத் தோழர்கள் பங்கேற்பர் என்று சமூகநீதி மாணவர் இயக்கம் மாநிலத் துணைச் செயலாளர் இர்ஷாத், 

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஅய்எஃப்எஃப்) பங்கேற்கும் என்று அதன் மாநில செயலாளர் சீ.தினேஷ் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment