சென்னை, நவ. 14- சமூக ஊடகங்கள் தொடர் பான இணையவழி சான் றிதழ் பயிற்சியை பெற விரும்பும் கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுமம் (ஏஅய்சிடிஇ) அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக ஏஅய்சிடிஇ திட்டப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் உன்னி கிருஷ்ணன், அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்டோ ருக்கு அனுப்பிய சுற்ற றிக்கை: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு சமூக ஊட கங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி, கல் வியாளர்களுக்கு வழங் கப்படுகிறது. சமூக ஊட கங்கள் வாயிலாக கற்பிப் பதற்கான உத்திகள், தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் மூலம் குறைந்த செலவில் தங்கள் கருத்துகளை கல் வியாளர்கள் முன்வைப் பது தொடர்பான பயிற்சி கள் வழங்கப்படும்.
இது இணைய வழி யில் வழங்கப்படும் 90 மணி நேர பயிற்சியாகும். இதற்கு கல்விக் கட்டணம் ரூ.88.50, மதிப்பீட்டுக் கட் டணம் ரூ.600 வசூலிக்கப் படும். இதில் பங்கேற்க <https://socialmobileskills.in/pretraining/> என்ற இணையதளத்தை அணுகலாம். திறம்பட பயிற்சியை முடிப்பவர்க ளுக்கு சான்றிதழ் வழங் கப்படும். மேலும் விவரங் களுக்கு<https://drive.google.com/drive/folders/1X5OkIz3w5w6xsUSo_txvTMMfeAiZiPEM> என்ற இணையதளத்தை அணு கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
No comments:
Post a Comment