சென்னை,நவ.24- அம்பேத்கர் படிப்பகம் என்ற பெயரில் ஆறாயிரம் கிராமங்களில் கான்கிரீட் கட்டடம் கட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 'அம்பேத்கர் படிப்பகம்' என்ற பெயரில் குறைந்தது 450 சதுர அடி பரப்பளவில் கான்கிரீட் கட்டடம் கிராமங்களில் கட்ட வேண்டும். அதில் அம்பேத்கர் புத்தகங்கள் மட்டுமின்றி பெரியார், மார்க்ஸ் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்துகள் அடங்கிய நூல்களையும் அந்த படிப்பகங்களில் வைத்து நூலகமாக நாம் உருவாக்கி வைக்க வேண்டும். எட்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் அந்த புத்தகங்களை புரட்டி பார்க்க வேண்டும். பத்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் முகங்கள் அறிமுகமாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment