புதுடில்லி, நவ 23- இருமல், சளி, காய்ச்சலுக்கு கொடுக் கப்படும் மருந்துகளில் 50 மருந்துகள் தரமற்றது என ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதன் முழு விவரம் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.மருத்துவத்துறையில் பல் வேறு போலி மருந்துகள் நடமாடி வருவது அவ்வப் போது கண்டுபிடிக்கப் பட்டு அகற்றப்பட்டு வரு கிறது.
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், கடந்த மாதம் சுமார் 1280 மருந்துகளை எடுத்து தர ஆய்வு செய்தது. அதில், குறிப்பிட்ட 50 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டது. அவற்றில் பெரும்பாலா னவை, கொல்கத்தா, கவு காத்தி, இமாச்சல், சண்டி கர் மாநிலங்களில் தயா ரிக்கப்பட்டதாகும். இந்த மருந்து விவரங்களை, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், நீபீsநீஷீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்தில், வெளியிட்டுள்ளது.
போலி மற்றும் தர மற்ற மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் மீது, சட்ட ரீதியான நடவ டிக்கை எடுக்க உள்ளதா கவும் தகவல்கள் வெளி யாகி உள்ளது.
No comments:
Post a Comment