இது என்ன கூத்து? - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

இது என்ன கூத்து?

9

பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் வந்துள்ளார் என்பது தெரிந்த செய்திதான்.

ஆனால் குறிப்பிட்ட ஊடகங்கள் அதை எப்படிப் பார்க்கின்றன - வெளியிடு கின்றன. அவர் திருமணம் செய்து கொண்டது ஒரு பார்ப்பனப் பெண்ணை (தொழிலபதிபர் நாராயணமூர்த்தியின் மகள்) அவரின் முன்னோர்கள் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். பிரிட்டன் பிரதமராகியுள்ள ரிஷி சுனக் ஹிந்து மதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்  - ஹிந்துவாக வாழ்பவர்; இஷ்டத் தெய் வத்தைப் பிரார்த்தித்து கையில் காப்புக் கயிறைத் தான் கட்டிக் கொண்டுள்ளார். 

பிரிட்டனில் ஹிந்துக்கள் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. இருந்தாலும்  அந்த மக்கள் பெரும்பான்மை வாதம் பேச வில்லை.

ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம்; ஹிந்துக்கள் தான் பெரும்பான்மையினர் இங்கே - என்று கூறுகிற பிஜேபி, சங்பரிவார்கள் பிரிட்டனிடமிருந்து பாடம் கற்க வேண்டும் என்று ஏன் எழுது வதில்லை?

இந்தக் கண்ணோட்டத்தில் ராஜன் குறை, ப. சிதம்பரம் போன்றோர் கருத் துக் கூறி இருப்பது வரவேற்கத்தக்கதே!

No comments:

Post a Comment