நெல்லை, அக். 31- கோவை கார் வெடிப்பு நிகழ்வில் தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தமிழ் நாடு ஆளுநர் எந்த ஆதாரங்களு டன் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. அது போன்று தேசிய புலனாய்வு முக மையும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து முபீனுக்கு பயிற்சி அளித்ததாக உறுதிப்படுத்தப் படாத தகவலும் பேசப்பட்டு வரு வதாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள குமந்தான் பகுதி யைச் சேர்ந்த இசக்கிமுத்து கடந்த 23ஆம் தேதி அனுமன் நதியில் ஏற்பட்ட காற்றாட்டு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு இரண்டு பெண்குழந்தைகள். இருவரும் பள்ளியில் படித்து வரும் நிலையில், இசக்கிமுத்துவின் குடும் பத்திற்கு இரண்டு குழந்தைகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் அறிவிக் கப்பட்ட நிதியை தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இசக்கி முத்துவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பாத்தாரிடம் நிவாரண நிதியை வழங்கினார். மேலும் இரண்டு குழந்தைகளின் படிப் பிற்கான செலவை தானே ஏற்றுக் கொள்வதாவும் அவர்களிடம் உறுதி அளித்தார்
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதலமைச்சர் அறிவித்த நிவாரணத்தொகை இசக்கி முத்துவின் குடும்பத்திடம் வழங் கப்பட்டுள்ளது. அவரது குடும்பத் திற்கு தமிழ்நாடு அரசு பாது காப்பாக இருக்கும். கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆளுநர் எந்த ஆதாரங் களுடன் கருத்துக் களை வெளியிட்டு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
நானும் ஆளுநரும் பொதுவான நபர்கள்தான், ஆளுநர் தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட்டு இருக்க வேண்டாம். அதனைத் தவிர்த்து இருக்கலாம் தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் இருந்தால் ஆளுநர், தமிழ்நாடு அரசிடம் அதனைத் தெரிவித்து அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத் திருக்கலாம்.
No comments:
Post a Comment