தூத்துக்குடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

தூத்துக்குடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை

தூத்துக்குடி,அக்.26- தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அவசர அறுவை சிகிச்சை அரங்கத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நேற்று (25.10.2022)  திறந்து வைத்தார். 

பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மய்யத்தில் ஆண்டுக்கு சுமார் 60,000 பேர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக் கப்படுகின்றனர். 

விபத்து, இருதய நோய், பிற காயங்கள், தீ விபத்து, பாம்பு கடித்தல் போன்ற பல்வேறு அவசர சிகிச்சைக்காக அனு மதிக்கப்படும் நோயாளிகளில் 80 விழுக்காட்டினர் குணமாகி செல்கின்றனர். 60 சதவீதம் பேர் உள்நோயாளிகளாக சிகிச் சைக்கு அனுப்பி வைக்கப்படுகின் றனர்.  இதில் சிலருக்கு காலதாம தம் இன்றி  உடனடியாக கூடுதல் சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப்பிரிவு(அய்சியூ) தேவைப்படுகிறது. சிலருக்கு உடனடியாக அவசர சிகிச்சை தேவை என்பதாலும், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளி களை மேல்தளத்திற்கு கொண் டுச் செல்ல தாமதம் ஏற்படுவ தனாலும் இந்த பிரிவில் அறுவை சிகிச்சை மய்யம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கீழ்தளத்தில் அமைத்திட தமிழ் நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மறுசீரமைப்பு பணியின்கீழ் ரூ.1.20 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் கூடிய 8 படுக்கைகள் கொண்ட வார்டு, விரிவாக்கம் செய்யப் பட்ட அவசர அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் பணிமருத்துவர் அறைகள் அமைக்கப்பட்டுள் ளது. மேலும், தூத்துக்குடி மாவட்ட ஏழை எளிய மக்கள் சிறப்பு சிகிச்சைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்ப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.131கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ் குமார், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் வர் சிவகுமார், உறைவிடம் மருத்துவர் சைலஸ் ஜெபமணி, அவசர சிகிச்சை  பிரிவு தலைவர் ராஜவேல் முருகன், உதவி செயற் பாட்டாளர் (பொதுப்பணித் துறை மருத்துவம்) கங்கா, வட் டாட்சியர் செல்வகுமார் உள் ளிட்டவர்கள் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment