ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் 'பேங்க் நோட் பிரஸ்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
காலியிடம் : ஜூனியர் டெக்னீசியன் (பிரின்ட்டிங்) பிரிவில் 14 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: லித்தோ ஆப்செட் மெஷின் மைன்டர், லெட்டர் பிரஸ் மெஷின் மைன்டர், ஆப்செட் பிரின்டிங், பிளேட் மேக்கிங், எலக்ட்ரோபிளேட்டிங் பிரிவில் அய்.டி. அய்., அல்லது பிரின்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது : 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.11.2022
விபரங்களுக்கு: bnpdewas.spmcil.com
No comments:
Post a Comment