கல்வித் தாகத்தால் தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

கல்வித் தாகத்தால் தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி

கொல்கத்தா, அக். 26- மேற்கு வங்காள மாநிலம் புரு லியா மாவட்டம் காசிப் பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதுள்ள சிறுமி தன் னுடைய கல்வித் தாகம் மற்றும் செவிலியர் ஆக வேண்டும் என்கிற கனவு டன் கல்விபயில்வதில் பெரிதும் ஆர்வத்துடன் இருந்துள்ளார். அச் சிறுமி பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமத்தில் நடந்த குழந் தைத் திருமணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் அச்சிறுமி கலந்து கொண்டாள். 

குடும்ப வறுமை காரணமாக சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அவளது பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் தான் படிக்க விரும்புவதாக சிறுமி கூறியும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சியின்போது கூறப்பட்ட குழந்தைகள் நலத்துறை அவசர எண் ணுக்கு தொடர்புகொண்டு பேசிய சிறுமி, தனக்கு குழந்தைத் திருமணம் நடக்க உள்ளது பற்றி கூறினார். 

உடனடியாக காசிப் பூர் கிராமத்திற்கு சென்ற குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரிடம் குழந்தை திருமணத்தால் நடக்கும் பிரச்சினை குறித்து எடுத் துக் கூறினர். இதையடுத்து அச்சிறுமிக்கு நடக்க இருந்த குழந்தைத் திரும ணத்தை அவர்கள் கைவிட் டனர். 

இதுகுறித்து சிறுமி கூறுகையில், கரோனா வால் எனது தந்தைக்கு வேலை பறிபோனது. இதனால் குடும்ப வறுமை காரணமாக எனக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க பெற்றோர் நினைத்தனர். ஆனால் எனக்கு நன்றாக படித்து செவிலியராக பணியாற்ற வேண்டும் என்று ஆசை உள்ளது என்றார்.

கல்வித்தாகத்தால் தனக்கு நடைபெறவிருந்த குழந்தைத் திருமணத்தை தன்னுடைய முயற்சியால் தடுத்து நிறுத்திய அச்சிறு மிக்கு பாராட்டு குவிகிறது.

No comments:

Post a Comment