அய்தராபாத்,அக்.31 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தனது அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக சந்திர சேகர ராவ் குற்றம் சாட்டினார்., 4 தெலங்கானா ராஷ்டிர சமிதி சட்டமன்ற உறுப்பினர்களை பண ஆசை காட்டி கட்சி மாற தூண்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தெலங்கா னாவில் இடைத்தேர்தல் நடைª பறும் முனுகோடே ராவ் சட்ட சபை தொகுதியில் நேற்று (30.10.2022) முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, எனது அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்ப தாக குற்றம் சாட்டினார். சந்திரசேகர ராவ் பேசியதாவது:- "டில்லியில் இருந்து தரகர்களை பா.ஜனதா அனுப்பி வைத்துள் ளது. அவர்கள் இங்கு வந்து ஒவ் வொரு சட்டமன்ற உறுப்பினர் களுக்கும் ரூ.100 கோடி விலை பேசி இழுக்கப் பார்க்கிறார்கள். ஆனால், உண்மையான மண் ணின் மைந்தர்களான நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அதை நிராகரித்து விட்டனர். பா.ஜனதா 20 அல்லது 30 ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பி னர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. அதன்மூலம் எனது அரசை கவிழ்க்க விரும் புகிறது. அப்படியே தங்கள் விருப்பம்போல் தனியார்மயத்தை அமல்படுத்த நினைக்கிறது." இவ் வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment