தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்கல்
குவைத் அயலக திமுக அணி சார்பில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திமுக தோற்றம் உள்ளிட்ட முப்பெரும் விழா 28.10.2022 மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை குவைத் அபு கலிபா பேராசிரியர் அரங்கத்தில் திமுக பொறுப்பாளர் சிதம் பரம் ந.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
அயலக திமுக அணி செயலாளர் புதுக்கோட்டை பஷீர் அகமது வரவேற்பு உரை ஆற்றினார். திமுக குவைத் நிர்வாகிகள் பத்தமடை சிந்தா, மண்ணை ரபிக், காட்டூர் ஆறுமுகம், புதுக்கோட்டை அருட்செல்வன், மேட்டு விலை ஜான் நவாஸ், சேகரை செல்லதுரை, குடந்தை தியாகராஜன், ஈரோடு ஜான் பாஷா, திருவாரூர் குமார், விழுப்புரம் ஜஹாங்கீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துப்பேட்டை சபரி வாசன், கோவை சரண்யா தேவி, பத்தமடை நாகூர் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பத்தமடை ஜிந்தா, புதுச்சேரி அறிவுமணி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். நிகழ்வில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன் 'தந்தை பெரியார்' எனும் தலைப்பிலும் திமுக அயலக அணி செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லா திமுக மருத்துவர் அணி நிர்வாகிகளில் ஒருவரான வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விருது பெற்றோர்: 'தந்தை பெரியார் விருது' ஆலஞ்சியார் என்கிற மன்சூர் அவர்களுக்கும், 'அறிஞர் அண்ணா விருது' - சிதம்பரம் ந. தியாகராசன் அவர்களுக்கும், 'டாக்டர் கலைஞர் விருது' - ஒரத்தநாடு பாப்பா தியாகராஜன் அவர்களுக்கும், 'பேராசிரியர் விருது' - காட்டுமண்ணை சையது முஸ்தபா அவர்களுக்கும், 'திராவிடவேள் விருது' - மேட்டு விலை ஜா. நவாஸ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. விழாவில் குவைத் டிவிஎஸ் குழுமம் நிறுவனர் ஹைதர் அலி. சுப்ரீம் கார்கோ நிறுவனர் சித்திக், தந்தை பெரியார் நூலக பொறுப்பாளர் சித்தார்த்தன், இன்பத்தமிழன் இளங்கோவன் செந்தில்குமார், திட்டச்சேரி அமீது ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மோனை சந்தை சிக்கந்தர் நன்றி கூறினார். அரங்கம் நிரம்பி வழிந்தது. குவைத் மக்களிடையே குறிப்பாக தமிழர்களிடையே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கருத்துகளை கேட்க தளபதி தலைமையிலான தமிழ்நாடு ஆட்சியின் சிறப்புகளை கேட்டு மகிழ, அதிக அளவில் ஆர்வத்துடன் மக்கள் திரண்டு இருந்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை அயலக திமுக அணி வழங்கி மகிழ்ந்தது மொத்தத்தில் மாநாடு போல் நடைபெற்ற நிகழ்ச்சி எழுச்சியை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment