திருச்சி, மகளிர் தனிச்சிறையில் மதிப் பூதியத்தின் அடிப்படையில் (Honorarium) Social Case Work பணியிடம் ஒன்று நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப் பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விதகுதி: சமூகபணி (அல்லது) சமூக சேவை (அல்லது) சமூக அறிவியல் (அல்லது), குற்றவியல், முதியோர் கல்வி, Andragogy (வயது வந்தோர் கல்வி) ஆகி யவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு: பொது சுழற்சி
வயது வரம்பு: 01.07.2022 அன்று குறைந்த பட்சம், 23 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆதிதிரா விடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்ப் படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாம் வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதர வற்ற கைம்பெண் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
ஊதிய விகிதம்: ரூ.15000/- (மதிப்பூதி யம்)
தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட வகுப் பினர் மட் டும் கீழ்க்கண்ட முகவரிக்கு கீழ்க்கானும் நகல்களுடன் வருகின்ற 10.11.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: சிறைக் கண்காணிப்பாளர், மகளிர் தனிச்சிறை, காந்தி மார்க் கெட் காவல் நிலையம் அருகில், திருச்சி - 620 086.
ஜாதிச் சான்றிதழ், குடும்ப ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, கல்வி சான்று நகல்களை விண்ணப்பத் துடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment