டிசம்பர் 6இல் அம்பேத்கர் நினைவு நாளில் மனுஸ்மிருதிக்கு எதிரான அறப்போர்! எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

டிசம்பர் 6இல் அம்பேத்கர் நினைவு நாளில் மனுஸ்மிருதிக்கு எதிரான அறப்போர்! எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

காஞ்சிபுரம், அக். 31- காஞ்சி புரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராம கூட்டு சாலையில், அம்பேத்கர் சிலை திறப்பு விழா காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் நேற்று (30.10.2022) நடந்தது. 

விழாவுக்கு, ஒன்றிய செயலாளர் தி.இளமா றன்  தலைமை வகித்தார். சிதம்பரம் மக்களவை உறுப்பினரும், விடுத லைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் சிலை நிறுவ பாடுபட்ட 22 பேருக்கு அம்பேத்கர் சிலை வழங்கி வாழ்த்தினார். 

இதையடுத்து, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பேசிய தாவது:  இந்த பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக  அம்பேத்கர் சிலை அமைக்க விடுதலைச்சிறு தைகள் கட்சியினர்  பாடு பட்டு வந்தனர். இன்று சிலையை திறப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அம்பேத்கர் ஒடுக்கப் பட்ட மக்களின்  நலனுக் காக பாடுபட்டவர். அம் பேத்கர்,  பெரியாரை ஏற் றுக்கொண்டவர்கள் பாஜகவை ஆதரிக்கமாட் டார்கள்.

தற்போது தமிழ்நாட் டில் உள்ள  பட்டியல் இன மக்கள் மற்றும் பழங் குடி மக்களை குறிவைத்து  செயல்படும் நிலை கண்டு  எச்சரிக்கையாக  இருக்க வேண்டும். நவம்பர் 6ஆம் தேதி அமைதி அறப்போர் என்கிற வகையில் மனு ஸ்மிருதி குறித்து பொது மக்கள்‌ அறிந்து கொள் ளும் வகையில் குறிப்பேடு  வழங்கப்பட உள்ளது.  இவ்வாறு அவர் கூறி யுள்ளார். கூட்டத்தில், விசிக மாநில வழக்குரை ஞரணி செயலாளர் பார் வேந்தன், காஞ்சி மண் டல செயலாளர் விடுதலைச் செழியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ்,   விசிக நிர்வாகி இந்திரா, அம்பேத்கர் வளவன்‌, ஒன்றியக்குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின், பருத்தி குளம் சேகர்,  ஏரிக்கரை டேவிட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment