சென்னை, அக்.31- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 5ஆவது வழித்தடத்தில் கோயம்பேட்டில் 3ஆவதுமெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத் தப்படுகிறது. இவற்றில், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான (47 கி.மீ) 5ஆவது வழித்தடமும் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில், உயர்மட்ட பாதையில் 41 நிலையங்களும், சுரங்கப்பாதையில் 6 நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் 41.2 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்டத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதனால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில், கோயம்பேட்டில் 3ஆவது மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி யுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேட்டில் ஏற்கெனவே சிஎம்பிடி, கோயம்பேடு ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. தற்போது, கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு சந்திப்பில் உயர்மட்ட பாதையில் 3ஆவது மெட்ரோ ரயில் நிலை யம் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் நிலைய பணிக்காக அந்தசாலையில் 500 மீட்டர் தொலைவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.
No comments:
Post a Comment