சென்னை,அக்.31- தமிழ்நாட் டில் உள்ள அரசு பள்ளி நூலகங் களுக்கு ரூ.3 கோடியில் புத்த கங்கள் வாங்கப்படும் என்று பள் ளிக் கல்வித்துறை அறிவித்துள் ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கான புத்தகங்களை ரூ.3 கோடியில் கொள்முதல் செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம், ஒவ்வொரு நடு நிலைப் பள்ளிக்கு ரூ.13 ஆயிரம், மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்திற்கும் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை கொள்முதல் செய்ய உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுக்கு ஒரு குழு மூலம் 2 ஆயிரம் புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது. புத்தக வெளியீட்டாளர்களிடம் இருந்து புத்தகங்களை பெறுவ தற்கு புதிய முறை இப்போது செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நூலகங் களுக்கு வழங்கக்கூடிய புத்தகங் களின் பட்டியல் மற்றும் வெளி யீட்டாளர்கள் வழங்க விரும்பும் தள்ளுபடி வரம்பு ஆகியவற்றை தெரிவிக்கலாம். புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விரைவில் கோரப் படும். சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் புத்தகங்கள் இருக்க வேண்டும்.
நூலக கொள்முதலுக்காக அமைக்கப்பட்ட குழு புத்தகங் களின் பட்டியலை தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்ப டைத்த பின்னரே கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரும் பணிகள் தொடங்கும். இணையத்தில் உள்ள படிவம் புத்தக வெளியீட்டாளர்களுக்கு மட்டும் அல்ல. ஆர்வமுள்ளவர் கள் மாநிலம்முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பயன் படும் புத்தகங்களின் பட்டிய லையும் பதிவேற்றலாம். மாணவர் களின் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நூலகங்கள் இல்லாத பள்ளிகளில் நூலகங்கள் தொடங்க அனுமதிப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment