ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கூடலூர்,செப்.30 மக்களிடையே பா.ஜனதா வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது என்று ராகுல்காந்தி கூறினார்.
கூடலூர் பேருந்து நிலையம் அருகில் அமைக் கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி, அவர் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள அனைத்து மக்கள் மீதும் ஒரே மொழியையும், ஒரே பண்பாட்டையும் பாரதீய ஜனதா திணித்து வருகிறது. எங்களுக்கு அனைத்தும் இணைந்து இருக்க வேண்டும் என்பதுதான் கொள்கையாகும்.
இங்கே எல்லோரும் ஒன்றாக, சமமாக இருக்க வேண்டும் என்பதை பா.ஜனதா விரும்பவில்லை. இன்றைக்கு நாட்டில் இருக்கும் நிலையை கவ னித்தால், பாரதீய ஜனதா பரப்பி வரும் வெறுப்பு தன்மை மற்றும் கசப்பு தன்மையால் மக்களிடம் வெறுப்பு தான் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. மேலும் மக்களிடையே வெறுப்பு அரசியலைத்தான் பா.ஜனதா பரப்பி வருகிறது. தற்போது இந்தியா வேலையில்லாத திண்டாட்டத்தை சந்தித்து வரு கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து இருக்கிறது. ஒரே பொருளுக்கு 2 விதமான ஜி.எஸ்.டி. சிறிய தொழிற்சாலைகள், விவசாயிகள் என எல்லோரும் மிக மிக கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்று நான் சிறு தொழில் செய்து வருபவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளை சந்தித்தேன்.
ஒன்றிய அரசு கொண்டு வந்து உள்ள ஜி.எஸ்.டி. உங்களுக்கு உதவுகிறதா அல்லது பாதிப்பு ஏற்படுத் துகிறதா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஒவ்வொருவரும் பேரழிவை ஏற்படுத்துகிறது என்று கூறினார்கள். சிலர் ஒரே பொருளுக்கு 2 விதமான ஜி.எஸ்.டி. உள்ளது என்றனர். ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவற்றை கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம், உங்கள் பணத்தை உங்கள் பாக்கெட்டில் இருந்து எடுப்பதற்காகத்தான்.
ஏற்றுக்கொள்ள மாட்டோம்
நாங்கள் ரூ.400-க்கு கியாஸ் சிலிண்டர் கொடுத் தோம். இப்போது அதன் விலை ரூ.1100-க்கும் மேல் சென்றுவிட்டது. பெட்ரோல், டீசல் விலை மிகவும் உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் தவறான முறையை பாரதீய ஜனதா கடைப்பிடித்து உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து மற்ற வர்களுக்கு தவறான முறையில் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் இதுபோன்ற ஒரு ஏற்றத் தாழ்வு கொண்ட இந்தியாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதுபோன்று பல்வேறு மக்கள் பிரச் சினைகளுக்காதான் இந்த நடைபயணம் நடத்தப் படுகிறது. நான் இந்த பகுதியில் உள்ள தெருக்களில் நடப்பதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த இடத்தில் சுற்றுலாவை மிகப்பெரிய அளவில் விரி வாக்கம் செய்யலாம்.
- இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment