உலக இதய நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

உலக இதய நாள்

சென்னை,செப்.30- சென்னை அரசு பொது மருத்துவமனைகளில், உலக இதய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (29.9.2022) நடைபெற்றது. ஆண்டுதோறும் உலக இதய நாள் செப்., 29இல் கடைப்பிடிக்கப்படுகிறது. 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி தலைமையில், இதய நாள் கடைப்பிடிக்கப்பட்டது. 'மனித நேயத்திற்காக இதயத்தை உபயோகிப்போம், இயற்கைக்காக இதயத்தை உபயோகிப்போம்' என்ற கருப்பொருளுடன், விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களிடம் இதயத்தை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத் துவமனை கண்காணிப்பாளர் மணி தலைமையில், இதயவியல் துறை சார்பில், விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. பேரணியில், புகை பிடித்தலை தவிர்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மருத்துவர்கள், செவிலியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் மணி கூறியதாவது: நல்ல உணவு, உடற்பயிற்சி, நல்ல உறக்கத்தை கடைபிடித்தால் இதய பாதிப்பு இல்லாமல் வாழலாம். புகைப்பழக்கத்தை கைவிட்டு, உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். பழங்கள், நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவில் சாப்பிட்டால், இதய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். துரித உணவு சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சைக்கிள், நடைபயணம் மேற்கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார். அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல்வர் சாந்திமலர் தலைமையிலும், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி தலைமையிலும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தலைமையிலும் உலக இதய நாள் கடைபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment