ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூபாய் இருபதாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூபாய் இருபதாம்!

சென்னை,செப்.30- விழாக் காலம் வருவதால், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகை யில், 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட வுள்ளது.  கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்து விழாக்கள் வரவுள்ளன. இதன் காரணமாக, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இதைத் தவிர்க்கும் வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை பயணக் கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படவுள்ளது. இந்த கட்டணம் உயர்வு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாக்களுக்கு தொடர்பில்லாதவர்களுக்கும் இந்த விழாக் காலத்தின் பெயரால் நடைமேடைக்கட்டணத்தை ஒன்றிய அரசு  உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நடை மேடைக்கட்டண உயர்வு இதுவரை வரலாற்றில் இல்லாத முன்னுதாரணமாகிவிட்டது.


No comments:

Post a Comment