செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

செய்திச் சுருக்கம்

தடை

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டு தடை விதித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலை வாய்ப்பு

தொழில் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர் களுக்கு 20 சதவீத வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தொழிற்சாலை பிரதிநிதிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்.

கலந்தாய்வு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று  (29.9.2022) தொடங்கியது.

சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவருக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

எரிவாயு

சாலை ஓர கடைகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படவுள்ளது.

மாறுதல்

பள்ளி கல்வித் துறையில் ஆசிரியராக இல்லாமல் நிர்வாக பணியில் உள்ள 10 ஆயிரம் பேருக்கு மாறுதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுப்பு

காவல்துறையினருக்கு முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்கு விடுப்பு தர வேண்டும் என உயரதிகாரி களுக்கு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவு.

வலியுறுத்தல்

ஒன்றிய அரசில் பணி செய்வதற்கு மாநிலங்கள் கூடுதல் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலி யுறுத்தியுள்ளது.

நீட்டிப்பு

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கும் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அனுமதி

லாலு பிரசாத் யாதவ் சிகிசிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கட்டாயம்

ஒரே எண்ணில் பல அலைப்பேசிகள் விற்கப்படு வதைத் தடுக்க அய்.எம்.இ.அய். எண்ணை பதிவு செய்வது இனி கட்டாயம் என ஒன்றிய அரசு உத்தரவு.

நியமனம்

ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞராக தமிழ் நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் வெங்கட்ரமணி நியமனம்.


No comments:

Post a Comment