தனிநபர் கடன், வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

தனிநபர் கடன், வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு

புதுடில்லி,செப்.30-வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 விழுக்காடு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4விழுக்காட்டிலிருந்து 5.9 விழுக்காடாக அதிகரித் துள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்பு திறன் கொண்டதாக இருக்கிறது என்றார். உலக அளவிலான அரசியல் சூழல், நிதிச் சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பணவீணக்கம் தற்போது 7விழுக்காடாக உள்ளது என்றும் அவர் கூறினார். நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் அது 6 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தனியார் நுகர்வு அதிகரித்து வருவதாகவும், கிராமப்புற தேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு தேவை அதிகரித்துள்ளதாகவும், விவசாயத் துறையும் மீள்தன்மையுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரண மாக வங்கி தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்ட வற்றின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 


No comments:

Post a Comment