சென்னை, செப்.1 சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் பல்கலைக் கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி தேவையான நாட்களுக்கு வகுப்பு களுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் மட்டுமல்லாது கலை அறிவியல் படிப்புகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் ஜூலை 22ஆம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் அய்ந்து நாட்கள் நீட்டித்தது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜூலை 27ஆம் தேதி முடிவடைந்து, கலந்தாய் வும் நடந்து வருகிறது. கடந்தாண்டை காட்டிலும் 35 ஆயிரத்துக்கும் அதிக மான மாணவர்கள் நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பித் துள்ளனர்.
எனவே, மாணவர்கள் மத்தியில் சேர்க்கைக்கான ஆர்வம் அதி கரித்துள்ளதால் சென்னை பல்கலைக் கழகம் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment