சென்னை,செப்.30- ஒடிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.முரளிதரை, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த செப்.12 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நிய மிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்றார்.
இந்நிலையில், ஒடிசா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யாக பதவி வகித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.முரளி தரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதி பதி தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தலைமை நீதிபதி எஸ்.முரளிதர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையில் சட்டப் படிப்பை முடித்துவிட்டு, டில்லி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்த வர். கடந்த 2006 இல் டில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யாக நியமிக்கப்பட்ட இவர், 2020 இல் பஞ்சாப் -அரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். 2021 ஜன.4 ஆம் தேதி ஒடிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment