60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

விடுதலை சந்தா வழங்கல்
இரண்டாம் முறையாக விடுதலை 4 முழு ஆண்டு, 8 அரையாண்டு, 3 பெரியார் பிஞ்சு சந்தா தொகை ரூ. 15,250 தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழக்குரைஞர் 
பா. மணியம்மை (மாநிலச் செயலாளர் திராவிட மகளிர் பாசறை) வழங்கினார்.  சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு 10 ஆண்டு சந்தா வழங்கினார். (01.09.2022)

சிவகங்கை மாவட்டத் தலைவர் ச.இன்பலாதன்-டாக்டர் மலர்கண்ணி ரூ.10,000 பொதுக்குழு உறுப்பினர் வேம்பத்தூர் ஜெயராமன் ரூ.7,000 என பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ரூ.17,000 வழங்கினர் (31-08-2022). இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் அண்ணா ரவி ஆகியோர் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தா ரூ.2,000த்தை வழங்கினர் (31-08-2022). காரைக்குடி மாவட்டத் தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை ஆகியோர் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தா ரூ.5,000 வழங்கினர் (31-08-2022). பட்டுக்கோட்டைமாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ்-அசோக்ராணி ஆகியோர் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் மதுக்கூர் ஒன்றியம் சார்பில் இரண்டாவது தவணையாக விடுதலை சந்தா ரூ.38,850  வழங்கினர். உடன்: மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன் (31-08-2022).

மேட்டூர் தாரமங்கலம் பெரியார் பெருந்தகையாளர் சி.வேல்முருகன் ஓராண்டு விடுதலை சந்தா தொகையினை மேனாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசிடம் வழங்கினார். மேட்டூர் மாவட்ட கழக செயலாளர் எடப்பாடி கா.நா.பாலு குடும்பத்தினரின் சம்பந்தி ம.பெ.அய்யாச்சாமி, பா.அறிவுமணி, ஆ.செல்வராசு, செ.எழில் ஆகியோர் விடுதலை சந்தா தொகைரூ.8,000 வழங்கினர். மேட்டூர் மாவட்டம் எடப்பாடி தேவூரில் ம.பெ.அய்யாச்சாமி மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் விடுதலை சந்தா வழங்கினார். மேட்டூர் ஆர்.எஸ். குறிஞ்சி சீட்கவர்ஸ் உரிமையாளர் பெரியார் பெருந்தொண்டர் சோமசுந்தரம் -அமராவதி இணையர், பேரன் குறிஞ்சி அழகன் ஆகியோர் ஆறு விடுதலை சந்தாக்கள் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர்.  நாமக்கல் மாவட்டத் தலைவர் குமார், குமாரபாளையம் நகரத் தலைவர் சரவணன் கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தா  வழங்கினார். உடன்: மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன் (30-08-2022).

ஆத்தூர்மாவட்ட கழகம் சார்பில் திரட்டப்பட்ட விடுதலை சந்தா தொகை ரூ.19.000த்தை மண்டல தலைவர் விடுதலை சந்திரன், மாவட்டத்தலைவர் த.வானவில், மாவட்டச்செயலாளர்  நீ.சேகர், மேனாள் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அ.சுரேசு, மண்டல இளைஞரணி செயலாளர் வேல்முருகன் ஆகியோர் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் நான்காவது முறையாக வழங்கினர். புதுக்கோட்டை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாவட்டத் தலைவர் மு.அறிவொளியிடம் விடுதலை வாழ்நாள் சந்தாவாக ரூ.20 ஆயிரம் வழங்கினார். தி.மு.க. கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்று உள்ள திருக்குவளை சோ.பா.மலர்மன்னனுக்கு நாகை மாவட்ட கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து பயனாடை அணிவித்தோம். மேலும் விடுதலை 10 ஆண்டு சந்தாக்களை வழங்குவதாக உறுதி அளித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரம்,  ராஜாஜிபுரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர்  ஜான் என்கிற திருவரசு ஓராண்டு விடுதலை சந்தாவினை  மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார்.

உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம் - பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் ஆகியோரிடம் உரத்தநாடு ஒன்றியத்தில் திரட்டப்பட்ட விடுதலை சந்தாக்களின் முகவரிகளை வழங்கினார். உடன் மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை. ஸ்டாலின், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், செயலாளர் அ. டேவிட், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் (01-09-2022). தஞ்சாவூர் மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  இரண்டாவது தவணையாக 2 விடுதலை  சந்தா வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் சி அமர்சிங், மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை. ஸ்டாலின், தஞ்சை மாநகர செயலாளர் அ. டேவிட், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் (01-09-2022). புவனகிரி மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான மாநில தி.மு.க. பொறியாளர் அணி செயலாளருமான துரை.கி.சரவணன், மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன் ஆகியோரிடம் ஓராண்டு சந்தா அளித்தார்.


அறந்தாங்கி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் தோழர் ரத்தினவேல், கழக இளைஞரணி தோழர் காரல் மார்க்சிடம் விடுதலை சந்தா வழங்கினார் (29.08.2022). 
கோபிச்செட்டிப்பாளையம் டாக்டர் மோக சுந்தர்ராஜன் கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தாவை வழங்கினார். உடன் மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன், மாவட்டத் தலைவர் சிவலிங்கம், காரமடை ராஜா, சி.மதிவதனி (30-08-2022).  ஈரோடு கோ.திருநாவுக்கரசு, கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை  சந்தா ரூ.8,000த்தை இரண்டாவது தவணையாக வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன் (30-08-2022). அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தா ரூ. 26,000அய் இரண்டாவது தவணையாக வழங்கினார். உடன்: கோ.திருநாவுக்கரசு  (30-08-2022). 

No comments:

Post a Comment