வாசிங்டன்,செப்.30- அமெரிக்க நாட்டில் மத்திய டெக்சாசில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மத்திய டெக்சாசில் உள்ள மெரிக்கோரில் குடி யிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தங்களை கேட்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்து பிணமாக கிடந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவரை காவல்துறையினர் பிடித் துள்ளனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் காதலன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த பெண்ணையும் அவரது 2 குழந்தைகளையும் சுட்டுக் கொன்றுள்ளான். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அந்த வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன் றுள்ளார். இந்த துப்பாக்கி சூடு காரணமாக அப்பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டன.
No comments:
Post a Comment