சென்னை, செப்.30 தமிழ்நாட்டில் 496 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 496 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ் நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 77 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 421 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனா வில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 34 ஆயிரத்து 698 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தாக்குதலுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 40 என்ற அளவில் உள்ளது.
இந்தியாவில்....
ஒன்றிய சுகாதாரத்துறை நேற்று (29.9.2022) வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் புதிதாக 4 ஆயிரத்து 272 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 27பேர் உயிரி ழந்தனர். நாடுமுழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (29.9.2022) ஒரு நாளில் கரோனா தொற்றிலி ருந்து 4ஆயிரத்து 474 பேர் குணமடைந்தனர். குண மடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து13 ஆயிரத்து 999 பேர் ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது வரை 40ஆயிரத்து 750 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் நேற்று (29.9.2022) ஒரே நாளில் 21 லட்சத்து 63 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை செலுத் தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 218 கோடியாக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment