2.9.2022 அன்று காலை 11.30 மணியளவில் பெரியார் 1000 வினா- விடை தேர்வு தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெ.ஜெய குமார் மற்றும் ஆசிரியர் மா.பன்னீர்செல்வம் ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்கி மிக சிறப்பாக தேர்வை நடத்திக் கொடுத்தார்கள். ஆசிரியர் ஜெ.ஜெயகுமார் தந்தை பெரியார் அவர்களின் வாழ்நாள் சிறப்புகளை பள்ளிப் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தார். தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், கூடுவாஞ்சேரி கழக தலைவர் மு.தினேஷ், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன் மற்றும் கழக மாணவர் கழக தோழர் வெ.இன்பதமிழ்பாரதி ஆகியோர் தேர்வுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்றனர்.
Saturday, September 3, 2022
குரோம்பேட்டையில் பெரியார் 1000
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment