பாட்னா, ஆக.25 பீகார் மாநிலத்தின் புதிய மெகா கூட்டணி அரசு, சட்டப்பேரவையில் நேற்று (24.8.2022) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய மெகா கூட்டணியை ஏற்படுத் தினார். இதையடுத்து பீகார் முதல்வராக 8-ஆவது முறையாக கடந்த 10ஆ-ம் தேதி நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். துணை முதலமைச்சராக ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றார்.
அதன்பின் அமைச்சரவையில் ராஷ் டிரிய ஜனதா தளம் கட்சிக்கு அதிக பட்சமாக 16 அமைச்சர் பதவிகள் வழங் கப்பட்டன. தனது கட்சிக்கு 11 அமைச் சர்களை நிதிஷ் வைத்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி களும், ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ் தானி அவாம் மோர்ச்சா கட்சிக்குஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன. சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் அமைச்சராக்கப்பட்டார்.
இந்நிலையில் பீகார் மாநில புதிய அரசு சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது. சட்டப்பேரவை தொடங்கியதும் சட்டப் பேரவைத் தலைவர் விஜய்குமார் சின்கா பதவி விலகினார். இதையடுத்து அய்க்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை துணைத் தலைவர் மகேஷ்வர் ஹசாரி தலை மையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது பேசிய துணை முதல மைச்சர் தேஜஸ்வி யாதவ், ‘‘பீகாரில் அமைந்துள்ள புதிய கூட்டணி வர லாற்று சிறப்புமிக்கது. இந்த கூட்டணி தொடரும்’’ என்றார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாரா கிஷோர் பிரசாத் பேசுகையில், ‘‘அரசியல் நம்பகத்தன்மையை நிதிஷ் குமார் இழந்துவிட்டார். சொந்த பலத் தால் முதலமைச்சராக முடியாதவர், பிரதமராக ஆசைப்படுகிறார்’’என கேலி செய்தார்.
பாஜக வெளிநடப்பு
243 உறுப்பினர்கள் கொண்ட ‘‘பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ் குமார் அரசுக்கு 164 சட்டமன்ற உறுப் பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக பாஜக., சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் நடந்தஓட்டெப்பில் நிதிஷ் குமார் 160 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.
அதன்பின் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசுகையில், ‘‘வாஜ்பாய், அத் வானி போன்ற தலைவர்கள் எல்லாம் என்னை மரியாதையுடன் நடத்தினர். ஏற்கெனவே எனக்கு முக்கியத்துவம் அளிக்காததால், கடந்த 2013-ஆம் ஆண்டில் பாஜக., உறவை துண்டித்தேன். பீகார் மாநில வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளமும், அய்க்கிய ஜனதா தளமும் உறுதி எடுத்துள்ளது.
இந்த முடிவை எடுத்ததற்காக, நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 2024ஆ-ம் ஆண்டு தேர்தலில் நாம் இணைந்து போராட வேண்டும் என நான் அனை வரையும் வலியுறுத்தினேன்’’ என்றார். பீகார் சட்டப்பேரவையில் சட்டப் பேரவைத் தலைவர் தேர்வு நாளை நடைபெறும் என சட்டப் பேரவைத் துணைத் தலைவர் மகேஷ்வர் ஹசாரி அறிவித்தார்.
ஆர்ஜேடி தலைவர்கள் வீட்டில் சோதனை
பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக பாட்னாவில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்கள் சுனில் சிங், சுபோத் ராய், டாக்டர் ஃபையாஸ் அகமது மற்றும் அஷ்பக் கரிம் ஆகியோரது வீடுகளில் சிபிஅய் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
No comments:
Post a Comment