விளிம்புநிலை மக்களுக்குச் சாதகமாக அமையும் என்பதால் திராவிட மாடலை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்! மக்களவையில் டி.என்.வி.செந்தில்குமார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

விளிம்புநிலை மக்களுக்குச் சாதகமாக அமையும் என்பதால் திராவிட மாடலை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்! மக்களவையில் டி.என்.வி.செந்தில்குமார்

புதுடில்லி, ஆக. 7- நாடாளு மன்ற மக்களவை விவா தத்தில் தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார் பே சியதா வது:

தி.மு.க. ஆட்சி வருவ தற்கு முன்பு 1967க்கு முன் தமிழ்நாட்டில் கிராமத் தில் உள்ள 10விழுக்காடு நில உரிமையாளர்களை 90 விழுக்காடு நிலமற்ற மக்கள் சார்ந்து வாழ்ந்த நிலை இருந்தது . இதே நிலை நாடு முழுவதும் இருந்தது. அக்காலகட்ட த்தில் அதிகபட்சமாக 110 நாட்கள் தான் விவசாயம் சார்ந்த வேலை இருக்கும் அப்போது கிடைக்கும் பொருளை வைத்து மீதமுள்ள 225 நாட்களை கடத்துவதும் மக்கள் நிலம் வைத்திருப்பவர்களி டம் உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலைக்குக் கார ணமாக இருந்தது. 

மக்களின் நிலையை கவனித்த கலைஞர் அவர்கள் 1972ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழ கத்தை உருவாக்கி நியாய விலைக் கடைகள் மூலம் பொது விநியோக முறை யின் கீழ் மக்களுக்கு உணவு தானிய பொருட்களை வழங்குவது இக்கழகத் தின் பொறுப்பு. இப்போ து உணவு தேவை மானி யம் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உணவுக்காக மற் றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைமை வரக் கூடாது என்று சுயமரி யாதை அடித்தளத்தை வைத்து இத்திட்டத்தை கொண்டு வந்தார். இவற் றைத்தான் இந்தியா முழுவதும் செயல்படுத்த முன்மாதிரியாக அமைந் துள்ளது. 

மக்கள் நலனை பேணி காத்தது திராவிடம் ஆன தால் இவை திராவிடக் கொள்கையால் சாத்திய மாக்கப்பட்டது. சமத்து வம் மற்றும் சுயமரியாதை நிறுவப்பட்டது. இந்த நரேந்திர மோடி அரசு எப்படி இருக்கிறது என் றால் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் மற்றும் தயிர் பொருட் களின் குறிப்பாக குழந்தை களுக்கு அதிகம் தேவைப் படும் பால் போன்ற பொருட்களின் மீது ஜி. எஸ்.டி. வரி உயர்த்தப்பட் டுள்ளது. ஆனால் அரசு ஒரு பொருள் மீது வரியை உயர்த்தினால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அந்த பொருள் மாட்டு கோமியம் அவற் றுக்கு உச்­சபட்ச ஜி.எஸ்.டி. வரியை கூட விதித்துக்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் அத் தியாவசிய பொருட் களின் விலையை அதிக ரிக்க வேண்டும். 

தேர்தல் வந்தால் எரி பொருளின் உயர்வில்லா மல் பார்த்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வுடன் விலையை மீண்டும் படிப்படியாக அதிகரிக் கிறார்கள் . இத்தகைய நடைமுறையை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் தான் திராவிட மாடலை நாடு முழுவதும் அமல் படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் திராவிட மாடல் விளிம்பு நிலை தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் இதே சமயம் நரேந்திர மோடி அரசாங் கம் கார்ப்பரே ட் நிறுவ னங்களுக்கு மட்டுமே சாத கமாக அமைகிறது.  -இவ் வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment