மின்சாரம்
சபரிமலை அய்யப்பன் கோயில் தேவஸ்தான போர்டு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. சபரிமலைக் கோயிலில் உன்னியப்பம், வெல்ல நிவேத்தியம், சர்க்கரை பாயாசம், அவுல் பாயாசம் இவற்றைத் தயாரிக்க மலையாளப் பிராமணர்கள் மட்டும் என்கிற விளம்பரம் தான் அது.
இதனைக் கண்டித்து கேரளாவில் குரல்கள் எழுந்தன. அம்பேத்கர் பண்பாட்டு அமைப்பின் (AMBEDKAR CULTURAL FORUM) தலைவர் சிவன் கடலி பிரச்சினையைக் கிளப்பினார்.
அரசு சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தின அதிகாரப்பூர்வ விளம்பரத்தில், குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களை முன்னிலைப்படுத்துவது, அவர்கள் தான் அய்யப்பன் கோயில் பிரசா தங்களைத் தயாரிக்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் சரியானது தானா?
அனைவரும் சமநிலை என்ற தத்துவத்துக்கு விரோதமானது என்று மாநில அரசுக்கும், மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் செய்த நிலையில், அந்த விளம்பரம் பின்வாங்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் அயர்ந்திருந்தால், அல்லது அந்த விளம்பரம் கண்களுக்குப் படாமல் போயிருந்தால், பார்ப்பன உயர் ஜாதித் தன்மை அரசு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கும்¢ அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்திருக்கும். கேட்டால் இதுதான் முன் மாதிரி (Precedent) என்று கூறி நிரந்தரப்படுத்தி இருப்பார்கள்.
நயவஞ்சகம் என்பது பார்ப்பனர்களின் ரத்தத்தோடு கலந்துவிட்ட நஞ்சுதானே!
- - - - -
ஸ்ப்ளெண்டர் மோட்டார் பைக் விளம்பரம் ஒன்று ஏடுகளில் வெளி வந்தது.
ஒரு பைக்கில் பயணம் செய்பவர்கள் யார் யாராம்? ஷிவ்ராம் அய்யர், சவுமியா அய்யர். இவர்கள் எல்லாம் ஸ்ப்ளெண்டர் மோட்டார் சைக்கிளில் ‘ஹாயாக‘ பயணிக்கிறார்களாம்.
அந்த பைக்குக்கும், ஸ்ப்ளெண்டர் அய்யர் என்று பெயராம்.
அய்யர் குடும்பத்தைத் தவிர வேறு யாராவது பயணித்தால் அந்தப் பைக் ஓடாதா?
இதேபோல கேரளாவில் நம்பூதிரி, மும்பை மற்றும் புனேயில் படேல், டில்லியில் சவுகான், கொல்கத்தாவில் மிஸ்ரா என்று பார்ப்பனப் பெயர்களில் விளம்பரமாம்!
எந்த இடம் கிடைத்தாலும் எப்படியெல்லாம் உள்ளே புகுந்து தங்களின் பூணூல் புத்தியை சன்னமாக நுழைக்கிறார்கள் பார்த்தேளா!
‘விளம்பர ஜாதி” என்று தலைப்பிட்டு முகத்திரையைக் கிழித்துக் காட்டியது ‘விடுதலை’தான் (10.11.2012).
இதெல்லாம் ‘விடுதலை’யின் நுண்ணாடி கண்களுக்குத் தான் பளிச்செனப்படும்.
பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள், திருந்தி விட்டார்கள் - நம்பித் தொலையுங்கள்!
No comments:
Post a Comment