பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை அழித்தொழிப்போம்! கே. பாலகிருஷ்ணன் (சி.பி.எம்.) முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை அழித்தொழிப்போம்! கே. பாலகிருஷ்ணன் (சி.பி.எம்.) முழக்கம்

சென்னை, ஆக. 5 பெண்களை அடிமைப்படுத் தும் மனுநீதியை அழித்தொழிப்போம் என சி.பி.எம். மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் பொதுமக்க ளுக்கு அறைகூவல் விடுத்தார். பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக வட சென்னை மாவட்டக் குழுவின் சார்பில் திரு.வி.க. நகர் தொகுதி யில் நடைபெற்ற பிரச்சாரத்தை கே. பாலகிருஷ்ணன் 2.8.2022 அன்று துவக்கி வைத்து பேசியதாவது: 

பெண்களுக்கு மிகப்பெரிய மரியாதை அளிக்கும் நாடு இந்தியா என கூறிக் கொண்டி ருக்கிறார்கள். ஆனால் தினசரி பெண்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. 10 நிமிடங் களுக்கு ஒரு பெண் பாலியல்  வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அங்கு செல்ல வேண்டாம் என வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பய ணிகளுக்கு ஒரு சில நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பான இடம் வீடுதான் என்ற நிலைமை மாறி அங்கேயும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. கணவனால், மாமியார், மாமனாரால் கொடுமை இழைக் கப்படுகிறது. நாளுக்கு நாள் இப்படிப்பட்ட கொடுமைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனைக்குரியது, கவலையளிக்கிறது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது. பெண்களை வன் முறைக்கு உள்ளாக்கிய நபர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க லாம் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் பெண்கள் காவல்நிலையம் சென்று புகார் அளித்தால் தங்களது ‘குடும்ப கவுரவம்’ பாதிக் கப்படும் என அஞ்சுகிறார்கள். எந்த சம்பிர தாயங்களோ, 'தெய்வங்களோ' பெண்களை இது போன்ற வன்கொடுமைகளில் இருந்து காப்ப தில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  இத்தகைய சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கிறது; ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுக்கிறது. தமிழ்நாட்டில் பெண் உரிமைக்காக தந்தை பெரியார் போராடினார். ஆனால் அந்த தமிழ்நாடு தான் பாலியல் வன்கொடுமை நடை பெறும் மாநிலங்களில் 5 ஆவது இடத்தில்உள்ளது.  இது தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமானமில்லையா?  மனித நாகரீகம் தோன்றிய காலத்தில் அந்த குழுக்களுக்கு தலைமை தாங்கியவர்கள் பெண்கள்தான். தாய்வழி சமு தாயம் என் பதுதான் ஆரம்பகால சமுதாயம். அப்படிப்பட்ட பெண்களின் அதிகாரத்தை படிப்படியாக பறித்துத் தான் இன்றைக்கு ஆணாதிக்க சமூகம் உருவாகியிருக்கிறது. சமூகத் திலே பல  கொடுமைகளுக்கு காரணமாக இருப் பது மனுநீதிதான்.  

மேலும்  மனிதற்குள்ளே நிகழும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை மனுநீதி நியா யப்படுத்துகிறது. பெண்களை அடிமையாகத்தான் வைத்திருக்க வேண்டும் என்று மனுநீதி கூறுகிறது. பெண்கள் நம்பிக்கையற்றவர்கள் எனப் பழிக்கிறது.  பெண்களை அடிமையாக வைத்திருக்கும் ஒரு குடும்பம் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?  எனவே பெண்களை அடிமைப்படுத்தும் அந்த மனுநீதியை அழித்தொழிப்போம், ஆணும் பெண்ணும் சமம் என்பதை உயர்த்திப் பிடிப் போம். ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, அனைவரும் சமம் என்ற சமுதாயத்தை உருவாக் குவோம். இதற்கு அனைத்து பகுதி மக்களும் முழு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ஜாதி, மத ஏற்றத் தாழ்வுகளை களைவோம், ஆணும் பெண்ணும் சமம் என்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்கு வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment