நலத்திட்டங்களை இலவசம் என்பது தவறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

நலத்திட்டங்களை இலவசம் என்பது தவறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

அய்தராபாத், ஆக.16 நலத்திட்டங் களை இலவசம் என்பது தவறு என்று தெலுங்கானா மாநில முதலமைச்சர்  சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 

சுதந்திர தினத்தையொட்டி, தெலுங் கானா மாநில தலைநகர் அய்தரா பாத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் பேசியதாவது:- மக்கள் நலன்தான் அரசுகளின் முக்கிய கடமை. ஆனால், அந்த கடமையை செய்யாத ஒன்றிய அரசு, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களை 'இலவசம்' என்று சொல்கிறது. அப்படி சொல்வது தவறு. மேலும், தற்போதைய ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவங்களை சீர்குலைக்கிறது. மாநில அரசுகளை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த சதி செய்கிறது. ஒன்றிய வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய 41 சதவீத பங்கை 29.6 சதவீதமாக குறைத்துவிட்டது. பொதுப் பட்டியலில் உள்ள விவகாரங்களை மாநில அரசு களுடன் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. தனது தவறுகளை மறைக்க வெறுப்பு அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறது என்று அவர் பேசினார்.


No comments:

Post a Comment