சென்னை,ஆக.31- இந்திய அள வில் தூய்மையான நகரங்கள் என்ற நிலையை தமிழ்நாட்டு நகரங்கள் விரைவில் அடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். திடக்கழிவு மேலாண்மை செயல் திட்ட பணிமனை கூட்டம் சென்னையில் தனியார் விடுதியில் நேற்று (30.8.2022) நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, அனைத்து மாநக ராட்சி மற்றும் நகராட்சி பொதுமக்கள் இணைய வழியாக தங்களது வரியினை செலுத்தவும் புகார்களை தெரிவிக்கவும் ‘TN Urban இ-சேவை’ எனும் கைபேசி செயலினையும், ‘எழில்மிகு நகரம்’ எனும் மாத இதழினையும் வெளியிட்டார்.
கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி களும் குப்பையில்லா நகர தர மதிப்பீட்டில் மூன்று நட்சத்திரத் தகுதியை அடைவது அவசியம். 72 நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள 73.10 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான தேக்க திட கழிவுகளை அப்புறப்படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது. இதன் மூலம் 2026க்குள் குப்பையில்லா நகரம் என்ற இலக்கை அடையவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சிகளும் குப் பையில்லா நகர தர மதிப்பீட்டில் 3 நட்சத்திரத் தகுதியை அடையும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment