"மக்களின் வாழ்க்கைத்தரம் சீரழிந்ததற்கு மோடி அரசே முக்கியக் காரணம்" : இரா. முத்தரசன் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

"மக்களின் வாழ்க்கைத்தரம் சீரழிந்ததற்கு மோடி அரசே முக்கியக் காரணம்" : இரா. முத்தரசன்

23

புதுக்கோட்டை, ஆக.30 மக்கள் கடுமை யான வறுமையிலும், துன்பத்திலும், துயரத்திலும் இருக்கிறார்கள். அம்மக் களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதை அலட்சியப்படுத்துவதும், கொச்சைப்படுத்துவதும் கடும் கண்டனத் துக்குரியது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள் ளார்.

புதுக்கோட்டையில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று (29.8.2022) செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:   ஏழை, எளிய மக்களால் பெற முடியாத உதவிகளை மாநில அரசுகள் ஆங்காங்கே செய்து கொண்டிருக் கின்றன. அதனை இலவசம் என்று கொச்சைப்படுத்துவது மிகமிக தவ றானது. இந்த இலவசங்கள் என்று குறிப்பிடுகிற எந்த பொருளாக இருந் தாலும் சரி, அதைக்கூட வாங்க முடியாத அளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் இருக்கிறது.

இந்த வாழ்க்கைத்தரம் இப்படி சீரழிந்ததற்கு   மோடி சர்க்கார்தான் முழு முக்கியமான காரணம். மக்கள் கடுமையான வறுமையிலும், துன்பத்தி லும், துயரத்திலும் இருக்கிறார்கள். அம்மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற திட் டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை அலட்சியப்படுத்துவதும், கொச்சைப்படுத்துவதும் கடும் கண்டனத் துக்குரியது" என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment