கல்வி, வேலைவாய்ப்பில் சமூக நீதியை உறுதிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் கதிர் ஆனந்த் கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

கல்வி, வேலைவாய்ப்பில் சமூக நீதியை உறுதிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் கதிர் ஆனந்த் கேள்வி!

புதுடில்லி,ஆக.5- கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து அரசு நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCS)  பிரத்யேக இட ஒதுக்கீடு வழங்கவும், ஓபிசி பிரிவினருக்கு சமூக நீதியை உறுதி செய்ய ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நாடாளுமன்ற மக்கள வையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.

அதன் விவரம் வருமாறு:---

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அனைத்து அரசு நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) பிரத்யேக இடஒதுக் கீட்டை அமல்படுத்த பல்வேறு குழுக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல சமூக நல அமைப்புகள் உட்பட பல தரப்பிலிருந்து கோரிக்கை உள் ளதா? அப்படியானால், அதன் விவரங்கள்; மற்றும்

(இ) நாட்டில் உள்ள ஓபிசியினருக்கு சமூக நீதியை உறுதி செய்ய ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

இதற்கு ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வுத் துறை ராஜாங்க அமைச்சர் சுஷ்ரி பிரதிமா பவுமிக் எழுத்துப் பூர்வமாக அளித்த பதில் விவரம் வருமாறு:அனைத்து ஒன்றிய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் ஒன்றிய அரசுப் பணி களுக்கான நியமனம் ஆகிய வற்றில் ஓபிசி பிரிவினர்க்கு 27% பிரத்யேக இடஒதுக்கீடு ஏற்க னவே அரசால் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது. 

ஓபிசிக்களுக்கு சமூக நீதியை உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படும் திட் டங்கள்: ஒன்றிய அரசு வேலை களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை விஷ யத்தில். ஓபிசிகளுக்கு 27% இட ஒதுக்கீடு உள்ளது. ஓபிசிக் களுக்கான ப்ரீ-மெட்ரிக் உதவித் தொகை - ஒன்றி லிருந்து பத்தாம் வகுப்பு  வரையிலான மாணவர் களுக்கு. ஓபிசி மாணவர்  களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை,- பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2  வகுப்பு மாண வர்களில் இதர பிற்படுத் தப்பட்டவர்கள் மற்றும்   பொரு ளாதாரத்தில் பின் தங்கியவர் களுக்கான வெளி நாட்டுப் படிப்பு களுக்கான கல்விக் கடனுக்கான வட்டி மானியத்தின் டாக்டர் அம்பேத்கர் திட்டம்.  ஓபிசி களுக்கான தேசிய பெல் லோஷிப். ஓபிசி ஆண் மற்றும் பெண் களுக்கான விடுதிகள் கட்டுதல். OBC/DNTS/EBC களின் திறன் மேம் பாட் டுக்கான உதவி.

ஓபிசிக்களுக்கான தொழில் முனைவோருக்கான நிதி (வென்ச்சர் கேபிடல் ஃபண்ட்) தொடங்கப்பட்டது. ஓபிசிக் களுக்கான தேசிய பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்  (NBCFDC)  குறைந்த வட்டி கடன் நிதி உதவித் திட்டங்கள் ஆகியன செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment