செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

செய்தியும், சிந்தனையும்....!

பட்டும் புத்தி வரவில்லையா?

* சென்னையிலிருந்து விமானம்மூலம் கேதார்நாத், கங்கோத்ரிக்கு 13 நாள் சுற்றுப்பயணம்.

>> மழை வெள்ளத்தில் மாண்டது போதாதா?

கூப்பிடு அந்த தருண் விஜய்யை!

* திருவள்ளுவர், பாரதியார்பற்றியெல்லாம் பேசி தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறார் மோடி.- வைகோ

பஞ்ச்: ஆமாம்... திராவிட கட்சிகளுக்கு மட்டும்தான் அந்த உரிமை இருக்கு.            - ‘தமிழ் இந்து'

>> தருண்விஜய் கொண்டுபோன திருவள்ளுவர் சிலை உ.பி. குப்பைமேட்டில் மூட்டை கட்டிதானே கிடக்குது!

கடவுளுக்குக் காப்பீடாம்!

* மும்பை - கிங்சர்கில் வைக்கப்பட்டுள்ள தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட 'பணக்கார' பிள்ளை யாருக்கு ரூ.316 கோடியில் காப்பீடு செய்யப் பட்டுள் ளது.

>> கடவுள் காப்பீடு செய்யப்படும் ஒரு பண்டமா? நல்ல தமாஷ்!

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோர் சிந்தனைக்கு!

* 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர், தேவி சிலைகள் அமெரிக்க அருங்காட்சிய கத்தில் கண்டுபிடிப்பு. 

>> ஆக, கடவுள்கள் திருடப்படக் கூடியவை! என்னே, கடவுள் சக்தி!

No comments:

Post a Comment