ஆதிதிராவிட மாணவர்களுக்கான அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

ஆதிதிராவிட மாணவர்களுக்கான அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும்

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவு

சென்னை, ஆக.30 சட்டப்பேரவை யில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின மாணவ - மாணவிகளுக்காக அறிவித்த திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, தலைமை செய லகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச் சர் கயல்விழி செல்வராஜ் தலை மையில் நேற்று (29.8.2022) நடந்தது. கூட்டத்தில், ஆதி திராவிடர் மற் றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக  வெளியிடப்பட்ட ஆளுநர் உரை, வரவு செலவு திட்ட உரைகளில் இடம் பெற்ற அறிவிப்புகள், சட்டப் பேரவையில் விதி 110இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறையால் வெளியிடப்பட்ட  பல்வேறு அறிவிப்புகளின் தற் போதைய நிலை குறித்து அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்புகளை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், இத்திட்டங்களின் பயன் அவர்களை விரைந்து சென்றிடுவதை உறுதி செய்ய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தர விட்டுள்ளார். 

கூட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர், இயக்குநர் ஆனந்த், பழங்குடியினர் நல  இயக்குநர் அண்ணாதுரை, தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment