புதுடில்லி, ஆக. 7- தமிழ்நாட் டில் உள்ள ஒற்றை வழி இரயில் பாதைகள் எப் போது இரட்டைப் பாதை களாக மாறும்? என்று மாநிலங்களவையில் ஒன் றிய இரயில்வேத் துறை அமைச்சரை நோக்கி மதி முக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி னார். அதன் விவரம் வரு மாறு,
கேள்வி
(அ) ஒற்றை வழிப் பாதைகளின் காரணமாக நாள்தோறும் 15 முதல் 45 நிமிடங்கள் வரை இரயில்கள் தாமதமாக வரு கின்றனவா? தமிழ்நாட் டில் பல்வேறு இரயில்வே கோட்டங்களில் உள்ள ஒற்றை வழிப் பாதைக ளின் எண்ணிக்கையைக் கண்டறிய இரயில்வே ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தியதா?
(ஆ) அப்படிப்பட்ட இரயில் நிலையங்களில், குடிநீர் வசதிகள், வாகன நிறுத்துமிடம் இல்லாமை, சுகாதாரமற்ற கழிவறை கள், போதிய பணியாளர் கள் இல்லாதது போன்ற அடிப்படைக் கட்டமைப் புப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதா?
(இ) அவ்வாறாயின், நிலைமையை மேம்படுத் துவதற்கும், எதிர்காலத் தில் இரட்டைப் பாதையை உருவாக்குவதற்கும் எடுக் கப்பட்ட நடவடிக்கைக ளின் விவரங்கள் என்ன?
வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விக ளுக்கு ரயில்வே அமைச் சர் அகுவினி வைஷ்ணவ் அவர்கள் 29.07.2022 அன்று அளித்துள்ள பதில்:-
(அ) ஒற்றை வழிப் பாதைப் பிரிவுகளில் இயக்கப்படும் இரயில்கள் உட்பட இந்திய இரயில்வேயில் உள்ள இரயில்கள், அனுமதிக் கப்பட்ட வேகத்தில் பட் டியலிடப்பட்டு, அதற்கேற்ப இரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இரயில்களின் ஒற்றைப் பாதை என்பது காரணமாக இருக்க முடி யாது.
(ஆ) நாடு முழுவதும் அனைத்து இரயில் நிலையங்களிலும் இலவச குடிநீர் வழங்குவது ரயில் வேயின் முயற்சியாகும். தேவையை நிறைவு செய்ய தமிழ்நாட்டின் ஒற்றை வழி இரயில் பாதைகள் உட்பட அனைத்து இரயில் நிலையங்களிலும் இலவச குடிநீர் வழங்க போது மான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
தேவை மற்றும் அனு சரணையின் அடிப்படை யில் மேலே உள்ள ஒற்றை வழி இரயில் பாதைகளில் சாத்தியமான அனைத்து இடங்களிலும் வாகனங் கள் நிறுத்துவதற்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறைகள் முறையா கச் சுத்தம் செய்யப்பட்டு, சுகாதாரமாகப் பராமரிக் கப்படுகிறது. தமிழ்நாட் டில் உள்ள இரயில் பாதைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(இ) இரயில்வே திட் டங்கள் பல்வேறு மாநில எல்லைகளில் பரவி இருப்பதால், இரயில்வே திட்டங்கள் மண்டல வாரியாக ஒப்புதல் கொடுத்து எடுக்கப்படு கின்றன. திட்டங்களின் வருமானம், நெரிசலான மற்றும் நிறைவுற்ற பாதை களின் அதிகரிப்பு, இரயில்வேயின் சொந்த செயல் பாட்டுத் தேவை, வள ஆதாரங்களின் இருப்பு, ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் திட் டம் மற்றும் ஒட்டுமொத்த நிதி ஆதாரம் ஆகியவற் றின் அடிப்படையில் இரட் டைப் பாதை அமைக் கப்படுகிறது.
01.04.2022 நிலவரப் படி, தமிழ்நாட்டில், முழுமையாக அல்லது பகுதியாக 14190 கோடி ரூபாய் செலவில் மொத் தம் 1234 கிமீ நீளமுள்ள 11 இரட்டைப் பாதைத் திட்டங்கள் இரயில்வே ஒப்புதலுடன் செயல்பட இருக்கிறது.
-இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment