நடிகமணி டி.வி. நாராயண சாமி அவர்களின் நூற்றாண்டு விழா நடத்துவதற்குரிய ஆலோசனைக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (29.8.2022) நடைபெற்றது.
கீழ்க்கண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது.
தலைவர்
கி. வீரமணி (ஆசிரியர், விடுதலை),
ஆலோசகர்கள்
டாக்டர் நல்லிகுப்புசாமி செட்டி,
க. திருநாவுக்கரசு (திராவிட இயக்க ஆய்வாளர்)
கே.எஸ். இராதாகிருஷ்ணன் (வழக்குரைஞர்)
திருமதி விஜயா தாயன்பன் (உறுப்பினர், செயலர் - தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம்)
கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன்
ஆர்.எம்.கே. முனிரத்தினம் (தலைவர், ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்கள்)
ஜி. இராமகிருஷ்ணன் (இ.ஆ.ப. (ப.நி.)
டி.வி.என். விஜய்
என். சுபாஷ் சந்திரபோஸ்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) நடிகமணி நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முதல மைச்சரை அழைத்து நடத் துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.
2. நடிகமணி அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல், வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டு அதை வெளியிட முடியாமலேயே காலம் கழிந்து விட்டது. அந்த நேரம் நடிகமணி அவர்களின் மறைவும் ஒரு காரணம்.
அந்தப் புத்தகம் இன்னும் சிறிது விரிவாகவும், செறி வுடனும் எழுதப்பட வேண்டும் என்று பலர் கருதினார்கள். அதன் அடிப்படையில் கலைமாமணி சிறீகவி அவர்கள் தாமாக முன் வந்து நானே இந்தப் பணியை மேற்கொண்டு சிறப்பாகச் செய்துகொடுக்கிறேன் என்று கூறி கடந்த ஒருமாத காலமாக இந்தப் பணியை செய்து வருகிறார்கள். அதற்காக அவருக்கு பாராட்டுத் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.
3. அடுத்து விழா மலர் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று கருதியதன் அடிப்படையில் அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. நடிகமணி அவர்களுடன் நெருங்கித் தொடர்பு கொண்டும், பழகியும், அவரைப்பற்றி நன்கு தெரிந்தும் இருக்கின்ற கலை, அரசியல் மற்றும் இதர துறைகளைச் சேர்ந்தவர்களிடம் அவர்களது அனுபவங்கள், நினைவலைகள் ஆகியவற்றை பெற்று விழா மலரில் இடம் பெறச் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
4. ஆவணப்படம் ஒன்று தயார் செய்வது என்றும், இதுகுறித்து நடிகமணி அவர்கள் நடித்த சினிமா காட்சிகள், அரிய புகைப்படங்கள், இதர ஆவணங்கள் ஆகியவற்றை இடம் பெறச் செய்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
5. இவ்விழாவை சிறப்பாக நடத்தி முடித்திட வைகோ எம்.பி, ஆர்.எம்.கே. முனிரத்னம் (ணிஜ். விலிகி) டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி, க. திருநாவுக்கரசு, திரு.வாகை சந்திரசேகர், திருமதி விஜயா தாயன்பன், மேனாள் அமைச்சர்
த.பொன்னையன், டி.கே.எஸ். கலைவாணன் ஆகியோரிடம் ஆலோசனை பெறுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment