புதுடில்லி, ஆக. 7- பெண்களுக்காக மார்பக புற்றுநோய் தொடர்பான தனிநபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள் ளது. இதனைத் திமுகவின் தென் சென்னை நாடா ளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்தார். தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்துள்ள இந்த தனிநபர் மசோதா, நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் நலன் தொடர்பானதாக அமைந்துள்ளது.
இதன்மூலம், மார்பகப் புற்றுநோய் பற்றி அனைத்து தரப்பு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது. நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் ‘மேமோகிராபி’ சிகிச்சைகளுக்கான வசதிகள் கிடைக்கும்.
மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு மேம்பட்ட நவீன சிகிச்சையை வழங்குதல் போன்றவை இந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளன. 73ஆவது குடியரசு ஆண்டில் நாடாளுமன்றத்தில் இது சட்டமாக்கப்பட வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தனது இந்த மசோதா மூலமாக இதனைச் சட்டமாக்கி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு சட்டம்-2022 என்று அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, நாடாளு மன்றத்தில் சகபெண் உறுப்பினர்கள் பெரிதும் வர வேற்றதுடன் பாராட்டும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment