ஆக.27இல் சென்னையில்!
சென்னை, ஆக.3 ‘விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் ஆன நிலை யில், 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களை, ‘விடுதலை' ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களிடம் சென்னையில் ஆகஸ்டு 27 ஆம் தேதி அன்று நடைபெறும் விழாவில் வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
திராவிடர் கழகத்தின் மாநிலப் பொறுப் பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (2.8.2022) முற்பகல் 10.30 மணிக்கு நடைபெற்றது.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு:
ஒரு பத்திரிகையில் ஆசிரியராக 60 ஆண்டுகளாகப் பணியாற்றி சாதனை படைத்தவர் - வரலாறு படைத்தவர் ‘விடுதலை' ஆசிரியரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்கள் ஆவார்.
50 ஆண்டுகள் ‘விடுதலை' ஆசிரியராகப் பணிபுரிந்ததை முன்னிட்டு, 50 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களை அளித்ததுபோல், 60 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வரும் தலைவருக்கு 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களை அளிப்பது என்றும், அதற்கான விழாவை ஆகஸ்டு 27 ஆம் தேதியன்று சென்னையில் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கீழ்க்கண்ட ஒருங்கிணைப்பாளர்களின் குழுவும் அமைக்கப்பட்டது.
குழு ஒன்று:
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், கழக வழக்குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், சென்னை மண்டல செயலாளர் தே.சே.கோபால், கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி, ப.க. தலைவர் தமிழ்ச்செல்வன், ப.க. பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் வருமாறு:
கும்மிடிப்பூண்டி, வடசென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், திருவள்ளூர்.
குழு இரண்டு
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, கழக இளை ஞரணி மாநில செயலாளர் த.சீ.இளந்திரையன், ஆடிட்டர் ரஞ்சித்குமார், மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் கோ.சா.குமார், தம்பி பிரபாகரன் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் வருமாறு:
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத் தாசலம், விழுப்புரம், திண்டிவனம், கல்லக் குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணா மலை
குழு மூன்று
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்
இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், தொழிலாளரணிச் செய லாளர் மு.சேகர், குடவாசல் வீரையன், திருவாரூர் சிவக்குமார், கோபு.பழனிவேல், பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா.இராம கிருஷ்ணன் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் வருமாறு:
நீலமலை, மேட்டுப்பாளையம், கோவை, தாராபுரம், கோபி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, லால்குடி, தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், காரைக்கால், காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம்.
குழு நான்கு
கழக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், அமைப்புச் செயலாளர்
வே.செல்வம், மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர்பாண்டியன், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில தலைவர் வா. தமிழ்பிரபாகரன், அண்ணா.சரவணன், மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தேன்மொழி,
பழ.ஜெகன்பாபு, வா.நேரு, மாரி.கருணாநிதி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் வருமாறு:
காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், செய்யாறு, ஓசூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மேட்டூர், ஆத்தூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திண்டுக்கல், பழனி, கம்பம், தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு.
கூட்டத்தில் பங்குகொண்டு
கருத்துத் தெரிவித்தோர்
சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (2.8.2022) காலை 10.30 மணிக்குத் தொடங்கி பகல் 2 மணிவரை நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக் களை விரைந்து திரட்டுவது குறித்தும், ‘விடுதலை' ஏன் பரவவேண்டும்? என்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது.
இதில், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முன்னிலை வகித்து கூட்டத்தின் நோக்கம் குறித்தும், ‘விடுதலை' யை பரப்பும் விதம் குறித்தும் பேசினார்.
இதனையடுத்து பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, கழக அமைப்பாளர் இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் ஊமை.ஜெய ராமன், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், ஈரோடு த.சண்முகம், தொழிலாளரணிச் செயலாளர் மு.சேகர், மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன், திராவிட மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் ப.சுப்பிர மணியன், பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் அய்யாதுரை, மாநில மருத்துவரணி செயலாளர்
கோ.சா.குமார், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில தலைவர் வா.தமிழ்ப்பிரபாகரன் உள்ளிட்டோர் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு வழிமுறைகள் குறித்துப் பேசினர்.
இதில் மாநில வழக்குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், மண்டலத் தலைவர் தே.சே.கோபால், கூடுவாஞ்சேரி மா.இராசு, வடசென்னை மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், பகுத்தறிவு ஆசிரியரணி ச.வினோத்குமார், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன், வடசென்னை மாவட்ட இளை ஞரணி செயலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தென்சென்னை மாவட்டத் தலைவர்
இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment