புதுச்சேரி, ஆக. 27- தஞ்சை வல்லம் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத் தின் (நிகர்நிலை)பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய மும், பெரியார் பிஞ்சு மாத இத ழும் இணைந்து பள்ளி, கல்லூரிகளில் பெரியார் 1000 வினா-விடை போட்டியை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான வினா-விடை போட்டி புதுச்சேரியில் 25.8.2022 அன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் ஏற்பாட்டில் புதுச்ச«ரி பெத்திசெமி னார் ஆங்கில மேனிலை பள்ளியில் தேர்வு நடை பெற்றது. பள்ளியின் பொது அறிவு பிரிவு ஆசிரியர் ஜான் பிரிட்டோ மாண வர்களை நெறிப்படுத்தி னார். போட்டியை புதுச் சேரி மாநில கழகத் தலை வர் சிவ.வீரமணி, புதுச் சேரி பகுத்தறிவாளர் கழ கத் தலைவர் கைலாச நெ. நடராசன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மண்டல கழக பொதுக்குழு உறுப் பினர் லோ.பழனி, இளை ஞரணி தலைவர் திராவிட இராசா ஆகியோர் உட னிருந்தனர். போட்டிக் கான நெறி முறைகளை பெரியார் மணியம்மை சிந்தனை உயராய்வு மய்ய பேராசிரியர் ரமேஷ் தெரிவித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண் டார். தோழர்கள் பா.இலக்கியா, செ.கா.பாஷா ஆகியோர் கலந்து கொண் டனர்.
உப்பளம் இமாகுலேட் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள இமாகுலோட் பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடை போட்டி காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, பகுத்தறி வாளர் கழக புதுச்சேரி தலைவர் நெ.நடராசன் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய் யத்தின் பேராசிரியர் ரமேஷ் பெரியார் 1000 வினா-விடை போட்டி குறித்த விதி முறைகள் குறித்த நெறிமுறைகளை எடுத்துக்கூறி பார்வை யாளராக பங்கேற்றார்.
பள்ளியின் தமிழாசிரி யர் பி.ஆர்.மரியநேயல் நிஷா மாணவர்களை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித் குமார், பா.தமிழ் இலக் கியா, கவிஞர் எழுத்£ளர் இளவரசி சங்கர், தி.இராசா, லோ.பழனி, ஆ.சிவராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பல்வேறு பள்ளிக் கல்லூரிகளில் பெரியார் 1000 வினா-விடை போட்டி நடத்துவ தற்கான ஏற்பாடுகளை பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment