புதுடில்லி, ஜூலை 31 துணை ராணுவப் படைகளில் 4 ஆயிரம் காலி யிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.
அதில், நாட்டின் 6 துணை ராணுவ படைகளில் 84 ஆயிரத்து 405 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதிகபட்சமாக ஒன்றிய ரிசர்வ் காவல் படையில் 29 ஆயிரத்து 985 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், எல்லை பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 254 பணியிடங்களும், சாஷஸ்திரா சீமாபால் படையில் 11 ஆயிரத்து 402 பணியிடங்களும், ஒன்றிய தொழிற்பாதுகாப்பு படையில் 10 ஆயிரத்து 918 பணியிடங்களும், இந்தோதிபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையில் 3,187 பணியிடங்களும், அசாம் ரைபிள் படையில் 9,659 பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment