நன்றி சொல்வோம் விடுதலைக்கே - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

நன்றி சொல்வோம் விடுதலைக்கே

20

அறுபது ஆண்டுகள் ஆசிரியர்

அரும்பணியில் வளர்ந்து விடுதலை


மூடத்தனத்தை திருத்த வந்த

முத்தமிழ் ஏடு விடுதலை


ஒடுக்கப் பட்டோர் உயர்வுக்கு

ஓங்கி ஒலிக்கும் விடுதலை


பகுத்தறிவுப் பாடம் சொல்லும்,

பள்ளிக் கூடம் விடுதலை


சூத்திர இழிவை மாய்க்கவந்த

சூரிய நெருப்பே விடுதலை


ஆதிக்க வெறியரின் சூழ்ச்சிக்கு

அடங்கா அரிமா விடுதலை


மந்தை ஏடுகள் மத்தியிலே

சிந்திக்கச் சொன்னது விடுதலை


நெருப்பு ஆற்றில் நீந்தியே

நீதியை காத்தது விடுதலை


தந்தை நமக்கு தந்து சென்ற

திராவிடப் போர்வாள் விடுதலை


நன்றி சொல்வோம் சந்தா சேர்த்து

நன்கொடை தந்து விடுதலைக்கே!


வாழ்க வாழ்க வாழ்கவே!

தமிழர் தலைவர் வாழ்கவே!!


வெல்க வெல்க வெல்கவே!

விடுதலை ஏடு வெல்கவே!!

- குடந்தை இளஞ்சேட்சென்னி


No comments:

Post a Comment