7ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளர்களில் முதலிடம் பெறுபவர் டெஸ்கார்ட்டஸ். 1596-ஆம் ஆண்டு மார்ச் 31 பிறந்த இவர் 1650-ஆம் ஆண்டு பிப்ரவரி 11 மறைந்தார். கத் தோலிக்கராகப் பிறந்த இவர் இயேசு சபை பாதிரியார்களின் பராமரிப்பில் இருந்து கல்வி கற்றார். அதற்கிணங்க தம் வாழ்நாள் முழுவதும் இவர் ஆசாரமான கத்தோலிக் கராகவே இருந்தார்.
என்றாலும், இவரது சிந்தனை வளம் காரணமாக இவரைப் பழிவாங்கி விட் டார்கள் கத்தோலிக்க இயேசு சபைப் பாதிரி கள். இவர் எழுதிய பிரபலமான நூல்கள் இரண்டும் மதச் சபையினால் தடை செய் யப்பட்டன. இவர் மரணமடைந்து 20 வரு டங்கள் கழிந்த பின்னரும் கூட இவரது தத்துவமும் கருத்துகளும் எல்லா பிரெஞ்சுப் பல்கலைக் கழகங்களிலும் நுழைய விடாமல் அடக்கி ஒடுக்கப் பட்டன என் றாலும் கூட, சிந்தனையாளர் வட்டாரங் களில் இவரது கருத்துகள் செழிப்பாக வளர்ந்து வந்தன. முற்றிலும் ஆச்சார சீலர்களான பல நூறு பாதிரிகள் இவரது புரட்சிக் கருத்துகளைச் சிரமேற்கொண் டொழுகினர். அவர்களையெல்லாம் இக் கருத்துகளைக் கைவிடும்படி மத மேலிடம் விரட்ட வேண்டியதாகி விட்டது!
உண்மையிலேயே இவர் சீரிய பகுத் தறிவாளர் என்பதில் வரலாற்றாசிரியர்கள் கருத்து வேறுபாடு காட்டவில்லை. ஆனால், இவர் பகுத்தறிவாளராக ஏன் வெளிப்படையாக வாழவில்லை? இக் கேள்விதான் பிரச்சினைக்குரியதாக இருந் தது என்றாலும், இதற்கு நல்ல விளக்கம் பின்னர் கூறப்பட்டு விட்டது இந்த விளக்கம் என்ன?
ஏறத்தாழ இவருக்கு சம காலத்தவராக இருந்தவர் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி கலிலியோ இவரைவிட மூத்தவர். விஞ்ஞான அடிப்படையில் சிந்தித்ததற்கு அவர் பெற்ற பரிசுகள் என்ன என்பது டெஸ் கார்ட்டசுக்கு நன்றாகத் தெரியும். எனவே தான், தம்மையும் அப்படிப்பட்ட சித்திர வதைக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதால்தான் பகிரங்கமான பகுத்தறிவா ளராகத் தம்மைக் காட்டிக் கொள்ளவில்லை.இவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்த பக்கிள் என்ற வரலாற்றாசிரி யரும், ராபர்ட்சன் என்ற வரலாற்றாசிரியரும் இவரைப் பலபடப் புகழ்கின்றார்கள். அய் ரோப்பாவின் அறிவுலகத்தை விடுதலை செய்த மிகப் பெரிய சீர்திருத்தச் செம்மல் என்பதும் நவீன கால விஞ்ஞானத்தையும், தத்துவத்தையும் உண்மையில் நிறுவி யவரே இவர்தான் என்றும் இவருக்குப் புகழ் மாலைகள் சூட்டப்படுகின்றன.
அந்தக் கால கட்டத்தில் மதச் சபைகளின் மூலமாக போப்புகள் மக்கள் மண்டையிலே சுமத்தி வைத்திருந்த தத்துவங்கள் போலி அரிஸ்டாட்டில் தத்துவங்கள் ஆகும். அதோடு பள்ளிக் கூடத்தார் என்ற பெயரி லும் சில போலி சீர்திருத்தக் கருத்துகள் மக்கள் மத்தியில் மதச் சபையால் பரப்பப் பட்டு வந்தன. இவற்றையெல்லாம் எதிர்த்து நின்ற புரட்சியாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவியர் டெஸ்கார்ட்டஸ் தான்.
அறிவின் அனுபவத்தை அடிப்படை யாகக் கொண்டே எல்லாக் கருத்துகளையும் ஏற்க வேண்டும் அல்லது தள்ள வேண்டும் சும்மா யாரோ பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு எதையும் நம்பக் கூடாது என்ற உயரிய தத்துவத்தை இவர் நாசுக்காக பரப்பி வந்தார்.
இந்த வாழ்க்கை முறைத் தத்துவம் அய்ரோப்பா முழுவதும் பரவியது. நான் சிந்திக்கிறேன். எனவே நான் இருக்கிறேன் என்பது இதன் மொழி பெயர்ப்பு. அதாவது மரபு, சாஸ்திரம், வேதம், முன்னோர் நடப்பு என்ற அடிப்படையில் யாரும் எதையும் நம்பக் கூடாது. அவனவன் தனது சொந்த அறிவில் பட்டதை ஆராய்ந்து அதன் படியே வாழவேண்டும் என்பது.
பிரான்சில் அப்போது செல்வாக்குடன் இருந்த மதப்பிரிவினர் தூய்மையாளர்கள் இவர்கள் மத வாழ்க்கையில் மட்டும்தான் தூய்மையாளர்கள் என்பதில்லை. தனி வாழ்க்கையிலும் தூய்மையான சிந்தனை யாளர்கள்; நாகரிக உணர்ச்சி மிக்கவர்கள், எனவே, விஞ்ஞான ரீதியில் அமைந்த டெஸ்கார்ட்டசின் கருத்துகள் இவர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஜேன்சனிஸ்ட் கள் எனப்பட்ட இந்த தூய்மையாளர்களை இயேசு சபை பாதிரிகளுக்கு அறவே பிடிக்காது. எனவே, தூய்மையாளர்களின் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் இலட்சியமாக விளங்கிய டெஸ்கார்ட்டஸ் மீது பாதிரிகள் பாய்ந்தனர். பிரான்சிலிருந்து டெஸ்கார்ட்டஸ் விரட்டப்பட்டார்.
ஹாலந்துக்குப் போய் குடியேறிய டெஸ்கார்ட்டசுக்கு அங்கும் சரியான சூழ்நிலை இல்லை. எனவே, மறைவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பாக சுவீடன் ராணி கிறிஸ்டினா அழைத்தார் என்பதற்காக அந்த நாட்டுக்குப் போனார்.
விஞ்ஞானத்துக்கு டெஸ்கார்ட்டஸ் செய்த தொண்டு மிகவும் இன்றியமையாதது. பரிணாம தத்துவம் பின்னர் டார்வினால் தெளிவாகச் சீரமைக்கப்படுவதற்கு முன் பாக டெஸ்கார்ட்சின் சிந்தனையில் நல்ல வண்ணம் விளக்கம் பெற்றது மிகவும் குறிப்பிடத்தக்கது. உலகம் யாராலோ திடீர் என்று சிருஷ்டி செய்யப்பட்டதல்ல. மாறாக படிப்படியாக இயற்கையினால் உருவாக் கப்பட்டது என்பது இவர் கூறிய கருத்து.
அடுத்து உடற்கூறு பற்றிய கருத்து. உடற்கூறு என்பது ஏதோ மாயாதத்துவம் அல்ல; மாறாக மனித உயிர் என்பது இயந் திர சாதன பாணியில் இயங்கும் ஒன்றே என்று உறுதியாகக் கூறினார். இவைதான் அய்ரோப்பாக் கண்டத்தின் நவீனகால விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை யானவை என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment